(பகுதி -1) தெரண தொலைக்காட்சியின் பிரபலமான Talk with Chatura நிகழ்ச்சிக்காக கல்கந்தே தம்மாநந்த தேரர் அவர்கள் வழங்கிய செவ்வி.

கேள்வி(1) :

என்னுடைய முதல் கேள்வி!

இந்த உரையாடலில் பௌத்த தேரர் என்றவகையில் நீங்களும் நானும் சமமான இருக்கைகளில் அமர்ந்து இந்த நிகழ்ச்சியை நெறிப்படுத்தும் போது நிச்சயமாக சமூகத்தில் இருந்து பௌத்த சாசனத்தை அவமதித்ததாக எனக்கு விமர்சனங்கள் எழலாம். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

 
பதில்:
மொத்த மக்கள் தொகையில் சிறுதொகையினரே அவ்வாறு கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்கு அதிக முக்கியமளித்து நாம் பதிலளிக்க வேண்டுமா என்பது என் முதல் கேள்வி.
எத்தனை சதவீதம் பேர் அப்படிக் கேட்கிறார்கள்?சிறுதொகையினரின் விமர்சனமே கடுமையானதாக காணப்படுகிறது.
இரண்டாவது. பௌத்த தர்மத்தின் படி எடுத்துக் கொண்டால் நாம் எப்போதும் ஒரே இடத்தில் சிறைப்பட்டிருக்க வேண்டியதில்லை. தர்மத்தின் மூலகொள்கையே நிலையற்ற தன்மை தான். அதாவது அனைத்தும் மாற்றத்துக்குள்ளாகும் என்ற சித்தாந்தம்.
 
ஆகவே மாற்றம் நிகழ்வது இயற்கை என்றால், அந்த மாற்றத்தோடு உடன்பட்டுச் செல்வதும் அந்த செய்தியிலேயே இணைந்து காணப்படுகிறது. அவ்வாறெனின் நவீன தொடர்பாடல் முறைகளோடு நாம் உரையாடலை மேற்கொள்ளும்போது நல்லதொரு உரையாடல் நிகழவேண்டுமெனின் நாம் ஒருவருக்கொருவர் சமமாக அமர்ந்து கொள்வது மட்டும் அல்ல என்னிடமிருந்து நல்ல கருத்துக்களை பெறவேண்டுமெனில் நீங்கள் விமர்சனரீதியாக என்னை கேள்விக்குட்படுத்தவேண்டும். அனத்திலும் என்னோடு உடன்படாமல் எதிர்கேள்வி கேட்பதன் மூலமே இதைப் பார்ப்பவர்களுக்கு என்னிடமிருந்து சிறந்த கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடியும்.
ஆகவே உங்கள் முயற்சி என்னிடமிருந்து சிறந்த கருத்துக்களை பெற முற்படுவது தானே?
ஒவ்வொரு விடயத்திலும் நீங்கள் என்னோடு ஒத்துப்போவதோடு என்னை சரி கண்டால் எனக்கு கூறுவதற்கு எந்த விடயமும் இல்லாமல் போகும்.
 
கேள்வி (2)
நீங்கள் களனி பல்கலைக்கழக விரிவுரையாளராக பொறுப்பேற்றுக்கொள்ள அடிப்படையாக அமைந்த விடயங்கள், நீங்கள் துறவு வாழ்க்கையில் இணைந்தமை பற்றி கூறுங்களே.
 
பதில்:
என்னுடைய கதையை எடுத்துக்கொண்டால், நான் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் பிறந்தேன். பிறகு பதிமூன்றாம் வயதில் காலியில் புத்தபிக்குவாக தீட்சை பெற்றேன். பின்பு பேராசிரியர் வல்பொலறாஹுல தேரரின் சிஷ்யனாக அவருக்கு கீழ் பயிற்சி பெற்றேன்.அவர் காலமாகும்வரை அவரோடு இணைந்து பணியாற்றினேன். பிறகுதான் அவரின் வல்பொல றாஹுல நிறுவகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றேன். அதன்பின் விரிவுரையாளராகி இன்று அதன் துறைத் தலைவராக செயல்படுகிறேன்.
 
Q(3): ஏனைய புத்த பிக்குகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது உங்கள் செயல்பாடுகள் நீங்கள் நினைக்கும் விதம் அனைத்தும் வித்தியாசமான அனுகுமுறையை கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இதற்கான காரணங்களை கூறமுடியுமா?
 
(A) : நான் நினைக்கிறேன்…
நான் சந்தித்த கோரமான நிகழ்வொன்றே என்னுள் அந்த மாற்றம் நிகழக் காரணமாகியது.
 
இங்கு நான் என் சொந்த அனுபவங்களை கூறுவது பரவாயில்லை தானே என்ன !
ஆம்…
அந்த நிகழ்விலொன்று தான், நான் காலி பறகஹகொட விஹாறையில் இருந்த போது உக்கிரமாக யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முத்திரையிடப்பட்ட பெட்டியில் இராணுவத்தினரின் பிரேதங்கள் கிராமங்களுக்கு வந்து கொண்டிருந்தன. அப்போது நான் ஒரு பிக்குவாக அந்த பிரேதங்களுக்கு பாங்சுகூலய (எனப்படும்) இறுதிக் கிரியைகள் நிகழ்த்த செல்வேன்.
அது ஒரு நிகழ்வு.
பிறகு அங்கே இறப்பெய்திய இராணுவத்தினரின் குடும்ப த்தினர் மரணித்த வரின் நினைவாக விகாரைக்கு தளபாடங்கள் மேலும் பல பொருட்களை பூஜை செய்வார்கள். மரணித்தவருக்காக மக்கள் அளிக்கும் இந்த பூஜைப் பொருட்களை நான்பார்த்துக்கொண்டிருப்பேன். 
இதன்பிறகு இந்நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. 1987 ஜுலை 27 இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கை கைச்சாத்திட்ட பின் இராணுவம் தென்பகுதிக்கு வருகிறது. பின் படிப்படியாக சிங்கள இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் தெற்கில் யுத்த நிலையொன்று தோன்றுகிறது. அதிலும் இறந்தவர்களுக்காக இறுதிக்கிரிகைகளை நடத்த நான் முன்னிற்கிறேன்.
 
அந்நேரம் எனது ஞாபகத்தில் நிலைத்துள்ள  ஓர் சம்பவம் தான், வன்முறையாலளர்களால் கோமல என்ற ஊரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகன்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.
அந்த மரண வீட்டுக்கு ஊர்மக்கள் வரக் கூடாது என தடுக்கப்பட்டிருந்தனர். அங்கு இருதிக்கிரியைக்காக  நான் போனபோது, ஊர்மக்கள் கூட்டமாக அவ்வீட்டைச்சுற்றி  நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த குடும்பத்தவர்கள் ஒருபிரேதத்தை எடுத்துச்சென்று அடக்கம் செய்துவிட்டு மீண்டும் வந்து மற்ற பிரேதத்தை எடுத்துச்செல்லும் நிலையே காணப்பட்டது.
 
இது ஒரு நிகழ்வு…
 
அதே காலகட்டத்தில் யுத்தத்தினால் என் மூத்த சகோதரர் கொல்லப்படுகிறார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, வெறுமனே இருதிக்கிரியைகள் நடத்துவதையும் தான விருந்து நிகழ்வுக்கு  சமூகமளிப்பதையும் 
அவர்களால் வழங்கப்படும் பிரிகர பூஜைகளை கையேற்பதையும் தவிர இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றை தர என்னால் முடியவில்லை.
வெறும் பார்வையாளராக இருப்பதை விட இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றைத் தர என்னால் முடியவில்லை. அந்நிலையில் எனக்குள் பல கேள்விகள் எழுந்தன.
 
நான் ஏன் புத்தபிக்குவாக இருக்கிறேன்?
எனது பாத்திரம் என்ன ?இதை த்தான் புத்தமகான் நம்மிடமிருந்து எதிர்பார்த்தாரா ?
 
இந்தக் கேள்விகளினால் என்னில் ஏற்பட்ட அதிர்வுகள் தான் நான் வித்தியாசமான பிக்குவாக மாற காரணமானது.
 
வெறும் பார்வையாளராக இருப்பதை விட இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றைத் தர என்னால் முடியவில்லை. அந்நிலையில் எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. நான் ஏன் புத்தபிக்குவாக இருக்கிறேன்? எனது பாத்திரம் என்ன ? இதை த்தான் புத்தமகான் நம்மிடமிருந்து எதிர்பார்த்தாரா ?
- கல்கந்தே தம்மானந்த தேரர்
Q(4) யுத்தம் தொடர்பாக எடுத்துக் கொண்டால்
இந்த யுத்தத்தை எவ்வாறாயினும் வெற்றி பெறவேண்டும் என்ற முடிவில் நாம் அனைவரும் ஒன்று பட்டிருந்தோம். நிறைய பௌத்த தேரர்கள் எவ்வாறாயினும் இந்த யுத்தத்தை வெற்றி கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் ஒன்றாக இணைந்து செயல்பட்டார்கள். உங்கள் சிந்தனை இவர்களின் செயல்பாடுகளிலிருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறது?
 
(A) இவ்விடயத்தில், இவ்வாறான பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்ற விடயத்தில் புத்தரின் வழிகாட்டுதல்கள் மீதே நான் என்னை நிலைநிறுத்திக் கொண்டேன்.
அப்படிப் பார்க்கும்போது எம்மால் இவ்வாறு எவரையும் “லேபல்” படுத்த முடியாது.
ஓர் உதாரணத்தை கூறுகிறேன்.
 
நான் இவ்வாறு எனது பயணத்தை தொடர்ந்த போது எனது மூத்த சகோதரர் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில், அவர் என் சகோதரன் என்குடும்பத்தின் வீரன் எனும் நிலையில் அது என்னை மிகவும் பாதித்தது.
அந்த துயரிலிருந்து என்னை நான் விடுவித்து க்கொண்ட முறையை சொல்வதானால்,
நாம் பொதுவாக மைத்ரீ தியானம் செய்வதை பழக்கப்படுத்தியிருக்கிறோமல்லவா, அதாவது சுவபத்வெத்வா… சுவபத்வெத்வா… (நலமடையட்டும்) என்று இயந்திரத்தனமாக பிரார்த்திப்பது.
ஒருநாளிரவு ஒன்பது மணிக்கு போல நான் மைத்ரீ தியானத்தை செய்துகொண்டு இருந்தேன். எனது சகோதரனுக்கு எதிராக ஆயுதமேந்தியவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை, அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருந்தால் அவருக்கு நலமே உரித்தாகட்டும். அவர் கவலையில் இருந்து விடுபடட்டும். அவர் இறந்து விட்டிருந்தால்
அவரும் என் சகோதரனைப் போல மறுமை விடுதலையை அடையட்டும் என்று தியானம் செய்தேன்.
இவ்வாறு நான் நினைத்த தினத்தில்
அவ்வளவு நாளும் என் மனதில் இருந்த பாரச்சுமை இலேசாகியதை என்னால் உணரமுடிந்தது.
இது தான் முதன் முதலில் எனக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்த சந்தர்ப்பமாகும்.
 
அதற்குப் பிறகு மட்டக்களப்பில் ஒரு நிகழ்ச்சிநிரலொன்றில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.-மெண்டேலா டயலோக் “என்ற அவ்வேளைத் திட்டத்தில் பல நாடுகளில் இருந்து பலர் வந்து கலந்து கொண்டார்கள்.
அந்நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்கும் முகமாக காலையில் இருபது நிமிடங்கள் எனக்கு விரும்பிய உரையொன்றை நிகழ்த்த நேரம் ஒதுக்கித்தந்திருந்தார்கள். நான் அப்போது அங்கே மைத்ரீ தியானத்தை நிகழ்த்தினேன்.
ஆங்கிலமொழியிலேயே
உரைநிகழ்த்தினேன்.
அப்போது ஓரிடத்தில் நான் இவ்வாறு ஆங்கிலத்தில் கூறினேன்.
“இந்த இடத்தில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் என் சகோதரர் முகம்கொடுத்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்காக தயவு செய்து என்னோடு இணைந்திருங்கள்.
என் சகோதரனுக்கெதிராக துப்பாக்கி ஏந்தியவர் யாராக இருந்தாலும் அவர் நலமடையட்டும். அவர் சந்தோசமடையட்டும்..
என்பதாக கூறினேன்.
 
இது அந்த நிகழ்ச்சி யில் பங்கு பற்றிய பிறநாட்டவர்களின் உள்ளங்களில் மிகுந்த நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது…
 
அன்று பகல் நாங்கள் குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களுக்கு போகவும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடவும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தது.
அதில் ஒன்று தான் முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளை சந்திப்பது.
அப்போது நான் முன்னால் விடுதலைப் போராளிகளை சந்திக்கும் வாய்ப்பை தேர்ந்தெடுத்தேன்.
வாழ்வில் முதல் தடவையாக மட்டக்களப்பு பிரதேசத்தின் முன்னாள் எல் டீடீ ஈ போராளிகளை நேருக்கு நேர் சந்திக்கிறேன். மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லையிலேயே எனது சகோதரர் இறந்தார்.
அன்று தான் நான் புரிந்து கொண்டேன், என் சகோதரனுக்கு எதிராக ஆயுதமேந்திய, நான் அறிந்திராத யாரோ ஒருவருக்கு நலம் வேண்டிப் பிரார்த்திப்பது போலல்ல
அவர்களை நேருக்கு நேர் சந்திப்பதென்பது!
அவர் என் முன்னால் உருவமாக நின்று கொண்டிருக்கிறார். யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று முன்பு நினைத்தது போலல்ல இச் சந்தர்ப்பம்.
முன்முறையாக அவர்களின் கதையை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்….
விசேஷ மாக அங்கு இரு விதவைப் பெண்கள் காயமுற்ற நிலையில் இருந்தனர்.
 
அவர்களில் ஒருவரின் கதையை கேட்டபோது என்னால் அதை தாங்கிக்கொள்ள மிக சிரமமாக இருந்தது.
என்சகோதரர் இறக்கும் முன் நல்ல நிலையில் சந்தோசமாக வாழ்ந்திருந்தார்.
இந்தப் பெண்ணின் வாழ்வோ முன்பும் கூட துயரம் நிறைந்த தாகவே இருந்துள்ளது என்பதை அப்போது நான் உணர்ந்து கொண்டேன்.
 
இங்கு புத்ததர்மத்தின் படியான புரிதல் என்னவென்றால், எவரும் ஆயுதமேந்திய வராகவோ தீவிரவாதி யாகவோ பிறப்பதில்லை. தீவிரவாதக்குழந்தைகள் என்று யாரும் இருப்பதில்லை.
 
அங்குலிமாலவின் கதையில் பிறப்பால் அவன் அஹிங்சக என்கிற அப்பாவி யாகவே இருந்தான். பின் அவர் நிகழ்த்திய தொடர்கொலைகளின் காரணத்தால் அவரின் பெயர் கேட்டதும் மக்கள் பீதியுரும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த கதை, அவன் கொலையாளியானது விளைவே (பலன்) அன்றி காரணம் அல்ல என்பதை எமக்கு கூறுகிறது.
ஓர் அரசன் பலனை அழிக்கவே முயல்வான். ஆனால் புத்தரோ காரணத்தை மாற்றியமைக்கவே முன்னிற்பார்.
காரணத்தை மாற்றம் காணச் செய்தபின் அங்குலிமால  புனிதத் துறவியாக மாறுகிறார். பலனும் மாறுகிறது.
 
நான் கூறுகிறேன்.. சாதாரண மனிதன் என்றநிலையில் இருந்து பார்க்கும்போது
மனிதர்களை தீவிரவாதிகளாகவும், தேசப்பற்றாளர்களாகவும், அதே போல் எனது நாடு, எனது இனம் என்ற அடிப்படையில் பார்க்கத்தூண்டும் எண்ணம் மேலோங்கும். கொஞ்சம் முன்னாள் சென்று
புத்தர் சொல்வதைப் போல சிந்திக்கும் போது எமக்குப்புரியும் நாம் அனைவரும் பிறப்பால் மனிதர்களே. அனைத்து குழந்தைகளையும் குழந்தைகளாகப் பார்க்கும்போது அவர்கள் அப்பாவிகளே. அவர்கள் வளரும் சூழலே அவர்களை கொலையாளியாகவோ அல்லது ஓர் புனிதராகவோ மாற்றுகிறது.
 
அந்தக் கிளிகளின் கதையைப் போல்… காற்றுக்கு அடித்துச் சென்று விழுந்த கிளிகளின் கதை அனைவருக்கும் தெரியும்.
எனவே நமது செயற்பாடாக இருக்கவேண்டியது பலனை இல்லாதொழிப்பதல்ல. மாறாக காரணத்தை மாற்ற முயல்வதே எமது பணியாக இருக்க வேண்டும். அதுவே ஓர் பிக்குவின் சமூக பாத்திரமாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
நீங்களும் நானும் இந்த இருக்கைகளில் சமமானவர்களாக இருக்கலாம். ஆனால் செயலில் நான் உங்களோடு சமமானவராக இல்லை. ஒரு துறவியின் காரியமாற்றும் முறை இவ்வாறு உங்களிலிருந்து வித்தியாசப்படுகிறது.
 
Q(5) நீங்கள் யுத்த வெற்றியை ஏற்றுக்கொள்கிறீர்களா..?
 
(A) இல்லை, யுத்தத்தின் மூலமோ ஆயுதங்கள் மூலமோ வெற்றி பெறமுடியாது. அதை புத்தரிரின் வார்த்தை களால் சொல்வதென்றால்…
 
ගාථා‘ජයං වේරං පසවති- දුක්ඛං සේති පරාජිතෝ, උපසංතෝ සුඛං සේති, හිත්වා ජය පරාජයා’
 
இது  அஜாசத்த அரசனுக்கும் கோசல மன்னனுக்கும் யுத்தமொன்று நிகழ்ந்தவேளை அது தொடர்பாக புத்தபெருமான் கூறியவை. அதாவது ஆயுதங்களால் பெறமுடிந்த வெற்றி என்று எதுவுமில்லை. அந்த வெற்றி யின் மூலம் சனங்களிடையே குரோதம் ஏற்படுகிறது. அந்தவெற்றியின் மூலம் கவலையில் துயரப்படும் ஒரு மக்கள் கூட்டம் உருவாக்கப் படுகிறது.
 
இந்த இரண்டும், அதாவது
வெற்றி பெற்ற மக்கள் கூட்டத்தின் உருவாக்கமும்  குரோதமும் கவலையும் கொண்டஒரு கூட்டத்தின் உருவாக்கமும்.
இதுதான் யுத்த வெற்றி என்பது.
 
மூன்றாவது நான்காவது வசனங்களில் சகவாழ்வு பற்றிய விளக்கத்தை புத்தர் கூறுகிறார்.
வெற்றி – தோல்வி என்ற இருநிலைகளைத்தாண்டிய ஒரு நிலைக்கு மனித சமூகத்தை கொண்டு வருவதன் மூலமே நாமனைவருக்கும் நிம்மதியாக வாழமுடியும். ஆகவே ஆயுதங்கள் மூலம் பெறும் யுத்த வெற்றியை புத்ததர்மம் ஏற்றுக்கொள்வதில்லை.
 
Q(6) நீங்கள் வட கிழக்கு பகுதிகளுக்கு சமூகமளிக்கிறீர்கள். சகவாழ்வு தொடர்பாக அரசியல் ரீதியாக சகவாழ்வை ஏற்படுத்துவதற்காக சகவாழ்வு மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. முன்பைவிட அதிகமாக சகவாழ்வு பற்றி பிரஸ்தாபிக்கப்படுகிறது. இந்த சகவாழ்வு தொடர்பான உங்கள் பிரவேசம் எப்படிப்பட்டது என்பதை கூறமுடியுமா?
 
(A) நான் புத்தரின் வழிகாட்டலின் படியே இதனை புரிந்து கொள்ள முயல்கிறேன்.
புத்தருக்கு தனது தந்தையான நாட்டின் அரசரிடம் கூறி அரச அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல சர்தர்ப்பங்கள் இருந்தன. அல்லது பிம்பிசார, அஜாசத்த,கோசல மன்னர்களின் உதவியைப் பெற்று அரச அதிகாரத்தின் மூலம் நல்லதொரு சமூகத்தை தோற்றுவிக்க அவருக்கு முடியுமாக இருந்தது.
அப்படியிருந்தும் அவருக்கே அரசனாக முடிசூட வாய்ப்பிருந்த நிலைமையிலும்
ஏன் அவர் ஆட்சிஅதிகாரத்தை விட்டு விட்டு சாதாரண மனிதராக மனிதர்களிடம் சென்றார்?
நான் சொல்கிறேன்..
அரச அதிகாரத்தின் மூலம் அல்ல, அந்த அதிகாரத்தை கைவிடுவதன் மூலமே இதனை செய்ய முடியும்.
 
இந்த விடயத்தில் எமது பிரவேசம் எப்படியென்றால்,
விசேஷ மாக வல்பொல ராஹுல நிறுவகத்தின் பணிகளின் போது கொள்கை ரீதியாக எமக்கு அரசாங்கத்தினதோ அல்லது அரசநிறுவனங்களினதோ, அல்லது நிதி வழங்கும் ஏனைய நிறுவனங்களுடனோ எந்த தொடர்பும் எமக்கு இல்லை.
நாம் சாமான்ய மனிதர்களிடம் செல்கிறோம். அவர்களோடு வேலை செய்கிறோம்.
என் அனுபவத்திலிருந்து சொன்னால்,
முதலில் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில்  கிளிநொச்சி யிலிருந்து ஒரு புத்தபிக்கு சாமான்ய மனிதர்களோடு இணைந்து எங்கள் பிரதேசத்துக்கு வருகை தருகிறார்.
மிக வயதான பிக்கு அவர்.
இது எனக்கு மிகவும் மனவருத்தம் அடையச் செய்த நிகழ்வாக இருந்தது.
இதன்பின் நானும் என்னோடு இணைந்து இன்னொரு பிக்குவான
தபுவனே சுததன ஹிமியும்.. (அவரின் சகோதரரும் யுத்தத்தினால் கொல்லப்பட்டிருந்தார்.)
அந்த வயதான பிக்கு வாழ்ந்த இடத்தை தேடிக்கொண்டு சென்றோம்.
 
இங்கே வந்து சில காலத்திற்கு பிறகு அந்த பிக்கு மரணித்து விட்டிருந்தார்.
அவர் எழுபதுகளில் சிங்கள ஆசிரியராக
நியமனம் பெற்று வடக்குக்கு சென்றவர். கிளிநொச்சி சிங்ஹல மஹா வித்தியாலயத்தில் கற்றுக்கொடுப்பவராக இருந்தார்.
நாம் அவர் வாழ்ந்த இடங்களில் அவர்பழகிய மனிதர் களோடு கொஞ்சம் கொஞ்சமாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டோம்.
அந்த மக்களிடத்தில் நம்மைப் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தினோம்.
அங்கே என் நினைவில் பதிந்த முக்கிய சம்பவமொன்றை கூற வேண்டும்,
துணுக்காய் என்ற பிரதேசத்தில் தேரல்கண்டல் என் பாடசாலையில் பயின்ற மாணவர்களை 
சந்தித்தோம். அவர்கள், 83ஜுலை கலவரத்தில் அப்பிரதேசத்துக்கு புலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகளாக இருந்தனர். அதை அறிந்து கொண்டதும் எமக்கு அது மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது. நான் 83 கலவரம் பற்றி கேள்வி ப்பட்டிருந்தேனே தவிர
அதன்மூலம் பாதிக்கப்பட்டிருந்த மக்களை நான் சந்தித்திருக்கவில்லை.
அன்று அந்த கூட்டத்தில் என்னால் உரையாற்ற முடியாமல் போனது. நான் அழுது விட்டேன். என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
அப்போது என்னை மன்னித்து க் கொள்ளும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். அது வெறும் அரசியல் கண்துடைப்பான வார்த்தை அல்ல. அச்சந்தர்ப்பத்தில் நிஜமாகவே எனக்கு கண்ணீர் வந்தது.
உங்களுக்கு நிகழ்ந்த வற்றுக்காக உண்மையிலேயே நான் வருந்துகிறேன்.
என்னை மன்னித்து விடுங்கள்.என்றுகூறினேன்.
அதன்பிறகு அந்த பாடசாலையின் அதிபரை சந்தித்தபோது, நீங்கள் கூறிய மன்னிப்பின் வார்த்தை கள்தான் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றார்.
 
அந்நேரம் அவர்களோடு உரையாட என் மொழிபெயர்ப்பாளர் எனக்கு உதவினார். எனக்கு தமிழ்பேசத்தெரியாது.
 
அந்த தருணத்தில் நான் அரச பலத்தை நாடவில்லை.எனது சகோதரர் இராணுவத்தில் இருந்தவரெனினும் இராணுவ முகாம்களுக்கோ அது சம்பந்தமானஇடங்களுக்கோ நான் செல்லவில்லை.
 
அவ்வாறு மனிதர்களிடம் நான் மன்னிப்புக் கோரிய நிகழ்வு அவர்களிடத்தில் பெரிய மாற்றத்தை ஏற்பட வழிவகுத்தது.
 
ஆகவே இந்த சகவாழ்வு என்பது எமது வேலை. எமது எனும்போது அது அரசாங்க அதிகாரிகளினதோ  அமைச்சினதோ வேலையல்ல.
இது உங்களினதும் எனதும் வேலை.
இதை நாம் எம் கைகளுக்கு எடுக்க வேண்டும்.
 
இந்த வேலையின்போது நாம் எந்த நிறுவனங்களிலிருந்து ம் நிதியுதவி பெறவில்லை.
எமக்கு சினேகமானவர்களிடம் நம்வேலைத்திட்டம் பற்றி கூறி அவர்களின் பண உதவி மூலமாக மட்டுமே செயலாற்றி னோம். எப்படியென்றால், மனிதர்களிடம் இவ்வேலை பற்றி அறிவித்ததும் அவர்களின் உதவிகிடைத்தது.
 
ஒருமுறை நம் வேலைத்திட்டத்தின்படி அந்த பிதேசத்திலிருந்து இரண்டு பாடசாலை மாணவர்களை ஹொரண பிரதேசத்துக்கு அழைத்து வந்தோம்.
அதற்கு போதுமான நிதி உதவி நமக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் நான் சொன்னேன், இந்த வேலையை நாம் செய்வோம். அவர்களுக்கு உணவளிக்க நல்ல ஆகாரமில்லாவிட்டால் எளிமையான முறையில் தேங்காய் சம்பலும் சோறும் கொடுப்போம்.
 
விசேஷ மாக வல்பொல ராஹுல நிறுவகத்தின் பணிகளின் போது கொள்கை ரீதியாக எமக்கு அரசாங்கத்தினதோ அல்லது அரசநிறுவனங்களினதோ, அல்லது நிதி வழங்கும் ஏனைய நிறுவனங்களுடனோ எந்த தொடர்பும் எமக்கு இல்லை. நாம் சாமான்ய மனிதர்களிடம் செல்கிறோம். அவர்களோடு வேலை செய்கிறோம்.
- கல்கந்தே தம்மானந்த தேரர்
 
அதாவது உங்கள் வீட்டில் ஒரு பிரச்சினை என்றால் அதை தீர்ப்பதற்கு அடுத்த வீட்டில் இருந்து நிதியுதவி பெறமுடியாதல்லவா?
ஒருவேளை அல்லது இருவேளை பட்டினி இருந்தாவது பரவாயில்லை. அதுகூட அந்த தீர்வுக்கான செயல்பாட்டின் ஒரு பகுதிதான். அப்படி பசியில் உழல்வதும்கூட  தீர்வை நோக்கிச்செல்லும் செயல்தான்.
ஆகவே, நான் இந்த விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டில் உள்ளேன். வெளிநாட்டில் இருந்து நிதியுதவி பெற்று இந்நாட்டின் சகவாழ்வை கட்டியெழுப்ப
முடியுமென்பதை நான் ஏற்றுக் கொள்வதில்லை.
 
Q(7) : அது தவறான விடயமல்லவே?
வெளிநாட்டு நிதி பெற்றாவது அதன் மூலம் அந்த அப்பாவி மக்களுக்கான வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது 
நல்லதுதானே? இதன் மூலம் ஒரு வகையில் சகவாழ்வை மேம்படுத்த முயற்சி செய்வது நல்லதில்லையா?
 
(A) : நான் செல்வதென்னவென்றால்,
சகவாழ்வு என்பது பௌதீகக்காரணிகளால் ஏற்படுவதில்லை. வாழ்வாதாரங்களை எம்மால் கட்டியெழுப்பிக்கொள்ள முடியும்.
இங்கே இதயங்கள் பிளவு பட்டுள்ளன. மனித மனங்கள்
காயமடைந்துள்ளன.
அந்த காயங்களை சுகப்படுத்திக்கொள்ள எமக்கு பணம் அவசியமில்லை என்று கூறுகிறேன்.
அதற்காக எமக்கு தேவைப்படுவது நேர்மையான தியாகத்துடனான உழைப்பு மட்டுமே. அதை அடுத்தவர்கள் மானசீகமாக உணர்ந்து கொள்வார்கள். இது நடிப்பல்ல என்பதை அவர்கள் உணர்வார்கள். இதுதான் இங்கு அவசியமாகிறது என்கிறேன்.
 
Q(8) : அப்படியென்றால், இப்போதிருக்கும் சகவாழ்வு க்கான காரியாலயங்கள், அமைச்சகங்கள், அரசியல் ரீதியான செயல்பாடுகளில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
 
(A): நான் அதை இப்படி கூறுகிறேன், இந்த விடயத்தை நான் அனுகும் முறை வித்தியாசமானது. இது மனதால் கவலையோடு உணரப்பட்டு செயற்பட வேண்டிய விடயம். வருமானநோக்கில் தொழிலுக்காக காரியமாற்றுவதும்
கவலையோடு மனித நேயத்துக்காக உழைப்பதும் ஒன்றல்ல.
 
இப் பணியை செய்வதற்காக மூன்று
அமைச்சகங்கள் இருந்தும் எமது சிங்கள பாடசாலைகளுக்கு தமிழ் ஆசிரியர் ஒருவரை அனுப்பவோ தமிழ்பாடசாலைகளுக்கு. சிங்கள ஆசிரியர் ஒருவரை அனுப்பவோ,
அது தொடர்பான தேசிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவோ எமக்கென தேசிய நிறுவனம் ஒன்றோ இதுவரை இல்லை.
 
மூன்று அமைச்சகங்கள், அவற்றில் பல அதிகாரிகள் மற்றும் காரியாலயங்கள்
இருப்பினும் அவர்களிடம்
இதுபற்றி எந்த திட்டமிடலுமில்லை.
 
பரஸ்பரம் நம்மால் உரையாடிக்கொள்ள முடியாமல் இருப்பதே இங்கு பிரச்சினை. எமக்கு புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள தடையாக எமது மொழியே இருக்கும் நிலையில், அதை நிவர்த்தி செய்ய எந்த வேலைத்திட்டமும் ஒழுங்காக இங்கே நடைமுறையில் இல்லை.
 
Q(9): நிறைய புரொஜக்ட் புரபோஸல்கள் இருக்கிறன. அதிகமான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இவை பயன் தருவதில்லையா?
 
(A): ஆம், ப்ரொஜக்ட் புரொபோஸல்கள் எழுதப்படுகின்றன, அதை கையளித்ததும் அதற்கான நிதி கிடைக்கப் பெறுகிறது.
பிறகு வேலைத்திட்டமொன்று நடைபெறுகிறது, இறுதியாக அறிக்கை எழுதப்பட்டு அது சமர்ப்பிக்கப்பட்டதும் அத்தோடு அந்தவிடயம் முடிவடைகிறது.
சகவாழ்வு என்பது அதுவல்ல என்று நான் கூறுகிறேன்.
 
Q(10) : ஒரு துறவியாக சில விடயங்களை பகிரங்கமாக நீங்கள் கூறும்போது சமூகத்தில் அதுபற்றி எதிர்ப்பு கள் வருவதுண்டா? ஏனெனில் நீங்கள் யுத்தத்துக்க எதிராக செயல் படுபவர் என்றவகையில் பல பிக்குகள் அதற்கு மாற்றாக கருத்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் மத்தியில் இந்த நாட்டையும் புத்தசாசனத்தையும் பாதுகாக்க வேண்டும். பிறநாடுகளின் தலையீடுகளை விட்டும் பௌத்த மதத்துக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை அகற்றவேண்டும். இல்லை என்றால் நமது அடுத்த பரம்பரைக்கு இவற்றை பாதுகாத்தளிக்க முடியாமல் போகும் என்ற பரவலான கருத்து நிலவுகிறது.
இதுபற்றி உங்கள கருத்து என்ன?
 
(A): இவை புத்த தர்மத்துக்கு எதிரானவை என்று நாம் எடுத்துக் கொண்டால். எனக்குள் நிலைபெறும் பேராசையும் தர்மத்துக்கு எதிரானது.
எனக்குள் இருக்கும் விரோத மனப்பான்மையும் தர்மத்துக்கு எதிரானது.
அவை வெளியே இருந்து வரவேண்டிய தில்லை.
அத்துர்க்குணங்களை இல்லாமலாக்கி கொள்வது தான் தர்மத்தை நோக்கிய பயணமாக கருதப்படுகிறது.
அவ்வாறு எனில் நாம் ஏன் நமக்குள் ஏற்படும் பிரச்சனைகளை விட்டு விட்டு
வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும்?
புத்தரின் கதைகளில் வருகிறது. அடுத்தவர்கள் பற்றி தேடிக்கொண்டிருப்பதா முக்கியம்? அல்லது
தம்மை நோக்கிய தேடலில் ஈடுபடுவதா முக்கியம்?
 
அப்படியென்றால் நான் கூறுகிறேன்
இது வெளியில் இருந்து எம்மைக் காப்பாற்றி கொள்ள வேண்டிய விஷயமல்ல, இது எமக்குள்ளேயே எம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய விடயம்.
 
நான் முன்பு கூறியபடி, அந்த பாடசாலைக்குச் சென்று நேர்மையுடனும் கண்ணீருடனும் மன்னிப்புக் கோரியதும்
அது எத்தனை மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது! கருணையும் மன்னிப்பும் தவிர அங்கே துப்பாக்கிகள் இருக்கவில்லையே? அதனால் எத்தனை மனிதர்களை வெற்றி கொள்ள முடியுமானது?
 
எனக்கு அங்கு பகலுணவு தானமளிக்கும் வீட்டினரில் அந்த தந்தையர்கள், 80களின் மனிதர்கள் அவர்கள்
உணர்வுபூர்வமாக எம்மை தழுவிக்கொண்ட முறையில்  எவ்வளவு அன்பிருந்தது?
 
இவ்வளவு நெருங்கிய தொடர்பு டைய
இரு இனங்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக இந்தளவிற்கு சண்டையிட்டுக் கொண்டது  எனக்கு புதுமையான விடயமாக இருந்தது.
 
எமக்கிடையிலிருக்கும் வேறுபாடு களையல்ல, எமக்கிடையிலான ஒற்றுமையான விஷயங்களையே நாம் 
காணவேண்டும்.
 
(தொடரும்…..)
 
இதன் அடுத்த பகுதியை விரைவில் எதிர்பாருங்கள் !!!

இதன் முழுமையான காணொளியை பின்வரும் இணைப்பில் காணலாம்.

https://youtu.be/PWUUWAZ24x0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *