(பகுதி -2) தெரண தொலைக்காட்சியின் Talk with Chatura நிகழ்ச்சிக்கு கண்ணியத்திற்குரிய கல்கந்தே தம்மாநந்த தேரர் அவர்கள் வழங்கிய செவ்வியின்.

Q(11): எமது புத்த சாசனத்தையும் எமது துறவிகளையும் பாதுகாத்து அடுத்த தலைமுறை வரைக்கும் கொண்டு செல்லவேண்டியது அவசியம் அல்லவா? இதற்காகத்தானே எமது தேரர்கள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்?
இந்த தேரர்களின் இத்தகைய செயல்பாடுகளைப் பற்றி என்னநினைக்கிறீர்கள்?

(A) நான் கேட்கிறேன்,
நான் செய்துகொண்டிருக்கும் இந்த வேலைத்திட்டத்தின் மூலமாக புத்தசாசனம் காப்பாற்ற படுவதில்லையா?
இதை மக்கள் அதிகமாக விரும்பமாட்டார்களா?
அதாவது பிரத்யேகமாக நான் எதையும் பாதுகாக்கப்போவதில்ல. நான் மற்றவர்களோடு கருணையோடு நடந்து கொள்கிறேன். அவ்வளவு தான்.

(Q): அந்த பிக்குகள் மீது உங்களுக்கு விமர்சனங்கள் இருக்கின்றனவா?

(A): நான் அதை காணும் முறையொன்றுள்ளது.
எமது நாடு எமது சமூகம் என்றளவில் எடுத்துக் கொண்டால்
நாம் அதிகமாக காயமடைந்த பாதிக்கப்பட்ட சமூகமாக இருக்கிறோம்.
காலங்காலமாக வரும் இந்த காயங்களை
கொஞ்சம் கொஞ்சமாக இன்னும் அதிகப் படுத்திக்கொண்டிருக்கிறோமே தவிர அந்த காயங்களை ஆற்றுவதற்காக பணியாற்ற எமக்கு நேரம் கிடைக்கவில்லை.

நான் கதையொன்று கூறுகிறேன்..
நான் வாழ்ந்தபிரதேசம் அம்பாறை மாவட்டம். எனது உறவினர் தாய் தந்தை வழியில் கேள்விப்பட்ட விடயமொன்றுள்ளது. அவர்களின் வழித்தோன்றல்கள் முன்பு 1818ல்நடந்த கலவரத்தின்போது..
மாத்தளையிலிருந்து
காட்டு வழியாக கிழக்கு பிரதேசத்துக்கு
இடம்பெயர்ந்தவர்களென்றும், அவர்கள் நூறு வருடங்களாக அக்கிராமங்களில்
வாழ்ந்து வருகின்றனரென்றும் அவர்கள் கூறுவார்கள். இதோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் போது, இறுதி யுத்தத்தின் போதும் நந்திகடால் பகுதிக்கு மக்கள் இலட்சக்கணக்கில் இடம்பெயர்ந்து வந்தார்கள்.
இந்தக்காட்சிகளை நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது, நந்திக்கடால் நிகழ்விலும் நான் கண்டது 1818,ல் என் உறவினர்கள் இடம்பெயர்ந்த அந்த காட்சியைத் தான்.
இவை இரண்டும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடந்தாலும் இரண்டும் ஒரேமாதிரியான நிகழ்வு தான்.

வடக்கில் நாம் எமது வேலைகளை செய்து கொண்டிருந்த போது நான் அதிகமான மக்கள் காயமுற்ற நிலையில் இருப்பதை கண்டேன்.
கடந்த சில வருடங்களாக அதிகமாக தற்கொலை முயற்சிகள் நிகழ்ந்த இடமாக கிளிநொச்சி அறியப்படுகிறது.
அந்த தற்கொலைகளுக்கு யுத்தத்தினால் ஏற்பட்ட மனபாதிப்புகளே காரணமாக இருந்தது. மேழும், அக்குடும்பங்களில் நிறைய பிரச்சனைகள் இருந்தன.
குடிப்பழக்கத்திற்கு அதிகமானவர்கள்
ஆட்பட்டிருந்தனர்.
வீட்டுவன்முறைகள் அதிகரித்திருந்தன.

இவை அனைத்தோடும் யுத்தத்தின் மூலம்
உருவாகிய சுகப்படுத்தப்படாத மனக்காயங்கள் சம்பந்தப்பட்டிருந்தன.

 

நான் சொல்வதென்னவென்றால்.. 1818ல் கலவரத்தில் ஏற்பட்ட காயங்களும் இன்னும் ஆறவில்லை தானே.? அப்படி எடுத்துக் கொண்டால், 1948க்குப்பிறகும் 56, 58, 71, 83 81லிருந்து 2009வரை. 87லிருந்து 90வரை.. தொடர்ந்து இரத்தம் சிந்தப்பட்டது. நான் கணக்கிட்டு பார்த்ததில் நமது நாட்டில் இரத்தம் சிந்தாத சமாதான காலமாக கணிக்கக் கூடியது வெறும் ஏழு வருடங்கள் மட்டுமே... தொடர்ந்தும் இங்கு இரத்தம் சிந்தப்பட்டது. மனித கொலைகள் நிகழ்ந்தன.
- கல்கந்தே தம்மானந்த தேரர்

நான் சொல்வதென்னவென்றால்..
1818ல் கலவரத்தில் ஏற்பட்ட காயங்களும் இன்னும் ஆறவில்லை தானே.?
அப்படி எடுத்துக் கொண்டால், 1948க்குப்பிறகும் 56, 58, 71, 83 81லிருந்து 2009வரை. 87லிருந்து 90வரை.. தொடர்ந்து இரத்தம் சிந்தப்பட்டது.
நான் கணக்கிட்டு பார்த்ததில் நமது நாட்டில் இரத்தம் சிந்தாத சமாதான காலமாக கணிக்கக் கூடியது வெறும் ஏழு வருடங்கள் மட்டுமே… தொடர்ந்தும் இங்கு இரத்தம் சிந்தப்பட்டது. மனித கொலைகள் நிகழ்ந்தன.
இதன் பின்னராவது நாம் ஓர் சமூகமாக எமது காயங்களுக்கு நிவாரணம் தேடும் வேலைத்திட்டமொன்று எங்காவது செய்யப்பட்டதா?
இல்லை என்பதே எனது பதில்!

போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலத்திலிருந்து அவர்களின் தொல்லைகளால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியினர் என்ற வகையில்
புத்தபிக்குகள் அதிகமாக மனக்காயங்களுக்கு உள்ளானவர்களாக இருந்து வந்தனர்.

அவர்களின் மனங்களில் தாம் இல்லாதொழிக்கப்பட்டு விடுவோம் என்ற பயம் காணப்படுகிறது. அது அவர்களாகவே உருவாக்கிக்கொண்ட கற்பனை அல்ல. கடந்தகால அனுபவங்களால் அடைந்த பாதிப்புகளால் அவ்வாறான ஓர் மனோபாவம் அவர்களிடையே வலுப்பெற்றிருந்தது.

இந்த காயங்கள் இருவகைப் படுகின்றன. ஒன்று யுத்தத்தின் மூலம் நேரடியாக ஏற்பட்ட உடல் காயங்கள். அடுத்தது எமது பெற்றோர் ஆசிரியர் மூலம் பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டுவந்த மனக் காயங்களின் எச்சங்கள்.

இந்த இரண்டுக்கும் புத்த பிக்குகள் அதிகமாக ஆட்பட்டுள்ளார்கள்.
அவர்களின் மனதிலிருந்து அந்தப் பயத்தை அகலச்செய்வது அத்தியாவசியமானது.
இல்லையென்றால்
நாம் சீக்கிரமே அருகிப்போய்விடுவோம்,
எமது இனம்அழிக்கப்பட்டு விடும் என்ற மூடிய சிந்தனை அவர்களை ஆட்கொண்டு விடும். அவர்கள் அவ்வாறு
நினைக்கத் தலைப்பட்டு விடுவார்கள்.

Q(12) : இப்போது எமது புத்தசாசனத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை இது தானா?

(A): ஆம், நமது புத்தசாசனத்துக்கு நிகழ்ந்திருப்பது இதுதான்.
நாம் அழிக்கப்பட்டு விடுவோம் என்று எமது பிக்குமார் அதிகம் பயப்படுகிறார்கள்.
வேற்று மொழிகளின் மூலம் கல்விகற்கும் வாய்ப்பு எமது கல்விமுறையால் கிடைக்கப் பெறுவதில்லை.
சிங்களம் மட்டும் அறிந்த நமது பல்கலைக்கழக மாணவர்களை எடுத்து கொண்டால் எமக்கு நன்றாக தெரியும் அவர்கள் நவீன மொழிப் பிரிவுகளில் கற்கும் ஏனைய மாணவர்களோடு நிறைய பிரச்சனைகளை எதிர் நோக்குகிறார்கள்.
மொழி புரியாமை காரணமாக அவர்களோடு சேர்ந்து செயலாற்ற இயலாமலிருக்கிறது. அதன் காரணமாக அவர்கள் தமக்கு பாதுகாப்பில்லையெனவும், தமக்குத் தேவையான பலம் இல்லையெனவும் அவர்கள் சிந்திக்கின்றனர். இந்த அணைத்து காரணங்களும் இணைந்து மற்ற இனங்களால், மதப்பிரிவினரால் தாம் அழித்து விடப்படுவோம் என தமது இருப்பைப்பற்றி அச்சமடைகிறார்கள்.

Q(13): விசேடமாக முஸ்லிம் சமூகத்தின் மூலம் எமக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற பயம் தற்போதைய எமது தேரர்களுக்கு இருக்கிறது. வெளிப்படையாகச்சொன்னால் அவர்களுக்கு எதிராக சில தேரர்களே நெருப்பு மூட்டும் வேலையை செய்தாரகள் இதை நீங்கள் நம்புகிறீர்களா?

(A): முஸ்லிம் களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை எடுத்து கொண்டால், நாட்டின் அனைத்து பிக்குமார்களும் அல்ல குறிப்பிட்ட சிறுபிரிவினரே இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
பொதுவாக நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.. இவ்வாறான இனவாத நிகழ்வு கள் நாட்டில் தேர்தல்கள் நடைபெறும் காலங்களை அண்மித்தே நடைபெறுகிறது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் மீண்டுமொரு தேர்தல் வருமானால் வாக்குகளை பெறும் நோக்கில் இவ்வாறான நிலையை இவர்கள் மீண்டும் உருவாக்குவார்கள்.
இச்சமயத்தில் இங்கே முஸ்லிம்கள் இல்லாவிட்டால் இந்த இனவாதச்செயல்களை பௌத்த கிறிஸ்தவ கலவர மாக கிறிஸ்தவர்களோடு ஏற்படுத்த முனைவார்கள்.
இப்போது இங்கே முஸ்லிம்கள் இருப்பதால் அந்நிலை இல்லை.
ஊடகங்கள் இந்த இனவாத செயல்பாடுகளைப் பற்றி மக்களுக்கு அறிவூட்ட பங்களிப்பு செய்ய வேண்டும்.
ஆனால் ஊடகம் இது போன்ற இனவாத செயல்பாடுகளுக்கு களமமைத்து கொடுக்கிறது.
செய்திகள் மூலம் இவற்றுக்கு விளம்பர ம் கிடைக்கச் செய்ய ஊடகம் துணை புரிகிறது.
இதற்கு மாற்றமாக சகவாழ்வு நோக்கமாக நடாத்தப்படும் செயற்பாடுகளுக்கு ஊடகம் மூலமாக கிடைக்கும் பங்களிப்பு போதுமான அளவிற்கு இல்லை.
அதிகமான பிக்குகள் வாழும் நாட்டில் ஒருசிலர் வெளியிடும் அறிக்கைகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிக்கப்படும்போது. இதன் மூலம் அனைத்து பிக்குமார்களும் அவ்வாறே செயல்படுவதாக ஒரு பிம்பம் உருவாக்கப் படுகிறது.

Q(14): இந்த சமூகத்தில் அதிகமானவர்கள்
தம்மை பிரசித்தி பெற்றவர்களாக காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். அந்த ஹீரோ மனநிலையில் இருக்கும் சிலர் தமக்கிருக்கும் அரச பலத்தையும் உபயோகித்து ஊடகங்களை தமது செயல்களுக்கு ஆதரவாக உபயோகிக்கின்றனர். அவர்களுக்கு ஊடக அனுசரணை அதிகமாக கிடைக்கிறது.

(A) : இவர்கள் மட்டுமா வீரர்கள். ஏன் எம்மால் வித்தியாசமான வீரர்களை உருவாக்க முடியாது?
இளைஞர்கள் அதிகமாக வீரர்களாக வரவே ஆசைப்படுவார்கள்.
இதில் இளைய பிக்குகளும் அடங்குவார்கள்.
வித்தியாசமான செயற்பாடுடைய பிக்குமார்களாக அவர்கள் செயல்பட இடமளிக்கப்பட வேண்டும்.
இப்போது இருப்பவர்கள் இனத்தைக் காப்பாற்றும் நோக்கில் செயல்படும் வீரர் கள் தானே.?
இனத்துக்கு பிரச்சினை யென்றொன்று இல்லாவிட்டால் பிரச்சினை களை உருவாக்கியாவது தாம் வீரர்களாக வேண்டும் என்று நினைத்து செயல் படுகின்றனர்.
உதாரணமாக ஒன்று சொல்கிறேன்,
ஒரு கடையொன்றில் பாதணிகளில் தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்டிருந்ததாக கூறி இளைய துறவிகள் சிலர் அங்கே பணிபுரியும் பெண்ணொருவரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும் வீடியோ ஒன்று பரவலாக வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் அது தர்மச்சக்கரமே அல்ல. கப்பலொன்றின் சுக்கானத்தின் மாதிரி வடிவம் என்பதை அந்த பிக்குகள் அறிந்திருக்க வில்லை. அவர்களுடைய நோக்கம் நாம் வீரராக பேசப்படவேண்டுமென்பதே.
இவ்வாறு இல்லாமல் வித்தியாசமான வீரர்களை உருவாக்கும் மாதிரித்திட்டங்களை நாம் வகுக்க வேண்டும்.
அப்படி நிகழ்ந்தால் இளையவர்கள் அதைப் பின்பற்றுவார்கள். அதுவே நமது செயற்பாடாக இருக்கவேண்டும்.

Q(15): நாம் ஓர் இனம் என்ற வகையில் எம்மை திரும்பிப் பார்த்தால், எமக்கு புத்தரின் டெட்டு ஒன்றை உடம்பில் பச்சைக் குத்த முடியாதல்லவா, புத்தரின் உருவம் பதிக்கப்பட்ட ஆடையொன்றை நாம் அணிய முடியாது, புத்த சிலையொன்றுக்கு புறமுதுகு காட்டி நின்று ஓர் புகைப்படம் எடுக்க முடியாது. இவ்வாறு செய்தால் அது பெளத்த தர்மத்தை அகெளரவப் படுத்தியதாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்வது சரியானது என நீங்கள் நினைக்கிறீர்களா?

(A) : இல்லை, ஆத்மீகரீதியாக முன்னேற்றமில்லாத வியாபாரிகளை பாருங்கள். நகைகள் அணிந்து முழு உடலையும் அவர்கள் நகைகளால் மூடியிருப்பார்கள். வெளியே இவ்வாறு அவர்கள் காட்டிக் கொள்வது உள்ளே அவர்கள் உணரும் வெறுமையை தான். வெளியே தமது பெருமையை வெளிக்காட்ட விரும்புபவர்கள் தனக்குள் வெறுமையாய் இருப்பவர்களே.
புத்ததர்மத்தை எடுத்துக் கொண்டாலும் எமது அடையாளங்களை அதிகமாக காட்டிக்கொள்கிறோமென்றால் அதன் அர்த்தம் உள்ளே எதுவுமில்லை என்பதுதான்.
புத்தசிலைகள், பெரகராக்கள், புனிதத் தந்த வழிபாடு, பூஜைகள் போன்ற கிரிகைகளால் அதிகமாக வெளிக்காட்டப்படுவது உள்ளே இருக்கும் வெறுமையை தான்.

தனக்குள் இருக்கும் உண்மையான பௌத்தனை பாதையில் வாகனமொன்றில் பயணிக்கும் போது நாம் கண்டுகொள்ளலாம். வாகனத்துக்குள் ஒரு புத்தர் சிலையிருக்கும். செவிமடுக்க தர்மப்பிரசங்கமொன்றை போட்டு வைத்திருப்பார்கள்.
ஆனால் அவ் வாகன சாரதிகள் தமக்கிடையிலான பிரச்சினைகளின் போது நடந்து கொள்ளும் முறையில் நாம் உண்மையான பௌத்தனை கண்டு கொள்ளலாம். அவ் எல்லா வாகனங்களிலும் புத்தர் சிலை இருக்கும்.
நான் சொல்வதென்னவென்றால்
வெளியே அடையாளமாக எதைக்கொண்டு வந்தாலும்
உள்ளே வெறுமையாக இருக்கின்றது என்பதைத் தான். அங்கே அடையாள பெளத்தம் இருக்கிறது, ஆனால் அது உள்ளார்ந்த மாற்றத்தை கொண்டதாக இல்லை.

உதாரணமாக ஒன்று சொல்கிறேன், ஒரு கடையொன்றில் பாதணிகளில் தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்டிருந்ததாக கூறி இளைய துறவிகள் சிலர் அங்கே பணிபுரியும் பெண்ணொருவரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும் வீடியோ ஒன்று பரவலாக வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அது தர்மச்சக்கரமே அல்ல. கப்பலொன்றின் சுக்கானத்தின் மாதிரி வடிவம் என்பதை அந்த பிக்குகள் அறிந்திருக்க வில்லை. அவர்களுடைய நோக்கம் நாம் வீரராக பேசப்படவேண்டுமென்பதே. இவ்வாறு இல்லாமல் வித்தியாசமான வீரர்களை உருவாக்கும் மாதிரித்திட்டங்களை நாம் வகுக்க வேண்டும்.
- கல்கந்தே தம்மானந்த தேரர்

புத்தமதத்தில் இருக்கும் பிரதான செயற்பாடுதான் எமது பேச்சில், வார்த்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வது. அது புறத்தில் நடக்கும் விடயம் அல்லவே!
அது உங்களுடனான விடயமுமல்ல. அது எனக்குள் நிகழ வேண்டியது.

உங்களோடு உரையாடும்போது உங்களுக்கு காயமேற்படாத வகையில்
எனது வார்த்தைகளை எப்படி. உபயோகிப்பது என்ற விழிப்புணர்வும்
ஒழுக்கமும் அவசியம்.
எனவே அடையாள பெளத்தம் தான் நமது பௌத்த சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினை யென்றால்,
நமது தர்மம் இன்று மிகவும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றே கூற வேண்டும். அப்படியெனின் எமது முரண்பாடு வெளியே யாருடனோ அல்ல, அது எமக்குள்ளேயே தான் உள்ளது.

Q(16): நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எமக்கிடையே நிறைய பிரச்சினைகள் உள்ளன. நாம் வித்தியாசமான கருத்துக்களை கூறுகிறோம் என இதை பார்ப்பவர்கள் எம்மை எதிர்க்கவும் கூடும்

(A) : நான் சொல்வது நூற்று க்கு நூறு சரியில்லாமல் இருக்கலாம். நாம் எதையும் ஒரேமாதிரியாக பார்ப்பதை விடுத்து வித்தியாசமான கோணத்திலும் பார்க்க முயற்சி செய்தாகவேண்டும்.
கேள்விக்குட்படுத்த வேண்டும்.
அப்படி நடந்தால் மட்டுமே இதிலிருந்து அடுத்த கட்டத்துக்கு நகரமுடியும். இல்லாவிட்டால் இதே இடத்தில் நிலைபெற்று நின்றுவிட நேரும்.

Q(17) : நீங்கள் கூறுவதைப் பார்த்தால் விஹாரைகளில் காலையில் செய்யப்படும் பண பிரசங்கம் தேவையில்லை, ஒவ்வொரு முச்சந்தியிலும் பாதை ஓரங்களிலும் புத்தர் சிலை அமைப்பது தேவையில்லை. அடையாளங்கள் அவசியமில்லை.

(A) : பாதைகளில், சந்திகளில் அதிகமாக புத்தசிலைகளை நிறுவுவது பற்றி எனக்குள் விமர்சனம் இருக்கிறது.
அதைப்பற்றி அல்ல நான் குறிப்பிடுவது,
அவ்வாறான செயல் எமது அதிகாரத்தை வெளிப்படுத்தும் செயல் போன்றது தானே !
ஆனால் நான் முன்பு சொன்னது போல் காயங்களுக்குட்பட்ட மனிதர்களை ஆத்மீக ரீதியாக சுகப்படுத்தி புணரமைப்பதென்பதில் அனைத்து
மதங்களும் பாரிய பங்காற்றுவது அவசியம்.

நாம் இப்படி நினைப்போம், யுத்தத்தின் மூலம் அல்லது என்பதுகளில் கடத்திச் செல்லப்பட்ட தமது மகனையிழந்த தாயொருத்தியை எடுத்துக் கொள்வோம்.
அவரின் மனக் காயங்கள் ஆறாது விட்டிருந்தால் அவர் மூலம் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் அதிகமாக அழுத்தத்தை எதிர் கொள்வார்கள்.
அவர் அடைந்த காயங்கள் காரணமாக ஏனையவர்களுக்கு காயமிழைக்க முற்படுவார். வயதாகும் போது அவர்களுக்கு தனது மருமகளோடு நல்லுறவை பேண முடியாது போகும், காரணம் அவரின் மனக் காயங்கள் இன்னும் ஆறவில்லை, எனவே அவரும் ஏனையவரின் உள்ளங்களை காயப்படுத்த முற்படுவார். மதங்களூடாக
இவ்வாறான மனிதர்களோடு அமர்ந்து பேசி அவர்களின் மனதை ஆற்றுப் படுத்த முடியும். நமது எதிரியானாலும் அவர்களுக்கும் வீடு குடும்பம் என்று உள்ளது. அவர்களும் நம்மைப்போலவே துயருறுவார்கள். அதனால் அவர்கள் மீதான கோபத்தை நான் விட்டுவிடுவேன். இவ்வாறு நினைப்பதன் மூலம் அவர்களின் மனம் எவ்வளவு அமைதியடைகிறது.
இதை அரசியல்வாதி களாலோ, பல்கலைக்கழக பேராசிரியர்களாலோ செய்ய முடியாது. இதை மதங்களின் மூலமாக மதங்களின் பங்களிப்போடு தான் நிகழ்த்தவேண்டும். மதங்களுக்கு இதில் முக்கிய பாத்திரம் உள்ளது.

மதங்களோடு இணைந்த அடையாளங்கள் மதகிரிகைகள் இருக்கிறன தான். ஆனால் நாம் முக்கியமாக செய்ய வேண்டியதை விட்டு விட்டு
அதிகமாக புத்தர் சிலைகளை நிறுவுவது, ஆசியாவிலேயே உயரமான புத்தர் சிலையை வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதையே நாம் செய்கிறோம்.
எமக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது எமது பேச்சு மனிதர்களோடு இருப்பதற்கு பதிலாக, கட்டிடம் சீமெந்து, கற்கள் போன்றவைகளோடு
முற்றுப்பெற்று விடுகிறது.

Q(18) : பெளத்த பிக்குகளுக்கு முஸ்லிம் சமூகத்தினால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன, இஸ்லாமியர்கள் பெளத்தர்களுக்கு சவாலாக இருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. ஆனாலும் அவ்வாறான ஓர் அச்சுறுத்தல் கத்தோலிக்கர்கள் கிரிஸ்தவர்கள் அல்லது வேறு மதத்தவர்களால் ஏற்படலாம் என்ற அச்சம் பெரியளவில் காணப்படுவதில்லை. இதற்கான காரணம் என்ன ?

(A): முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிறைய காரணங்கள் உள்ளன.
முஸ்லிம்கள் ஆயிரம் வருடங்களாக
இந்நாட்டில் வாழுகிறார்கள்.
அவர்கள் எப்போதும் இந்நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தவர்களல்ல.
வெளியே இருந்து ஆக்கிரமிப்புகள் நடந்தபோது கூட அவர்கள் இந்நாட்டு அரசனின் பக்கமே துணையாக செயல்பட்டார்கள்.
யுத்தத்தின் போதும் பெருமளவில் இராணுவத்திற்கு உதவியளித்தார்கள்.
அதனால்தான் காத்தான்குடி பள்ளிவாசல் கொலைகள் போன்றவை நடந்தன. யாழ்பாணத்திலிருந்து அவர்கள் விரட்டப்பட்டார்கள். இவற்றை நாம் சிந்திக்க வேண்டும்.
அவர்கள் உண்மையிலேயே சுதேச மக்கள் தான்.
கடந்த 25 வருடங்களாக நிகழ்ந்த உலகமயமாக்கல் காரணமாக அவர்கள் சவுதி அரேபியாவின் கலாச்சார விழுமியங்களை பின்பற்ற தலைப்பட்டனர்.

ஆயிரம் வருடங்களாக நாமனைவரும் ஒரே மக்கள் சமூகமாகவே இருந்தோம். நடந்தது என்னவென்றால்,
மத்திய கிழக்கின் எண்ணெய் வள நிதியுதவிகளோடு மத்திய கிழக்கின் தலையீடும்
வரத்தொடங்கியது.
இதனால் எம்மவர்களோடு முஸ்லிம்களுக்கு இருக்கும் தொடர்பு தூரவாகிப்போனது. எம்மைவிட கலாச்சாரரீதியில் மாறுபட்ட நிலமை காணப்பட்டது.
கிறிஸ்துவ மதத்திலோ இதற்கு மாற்றமாக நிகழ்ந்தது. போர்த்துக்கேய ஆக்கிரமிப்பு மூலம் கிறிஸ்தவ மதம் இங்கு வருகிறது. ஆயுதம் ஏந்திய மனிதர்கள் மூலமே அம்மதம் இங்கு வந்தது.
ஆனால் கடந்த 30, 40 வருடங்களில் அவர்களின்
கிறிஸ்துவ ஆலயங்கள் இங்கே உள்ளூர் மயமாகின. இதற்கு உதாரணமாக கண்டியில் இருக்கும் சேலையணிந்த மரியாளின் சிலையையும்.. நீர்கொழும்பில் எமது பிக்கு களின் ஆடையை ஒத்ததாக அணிந்த நிலையில் இருக்கும் இயேசுவின் சிலையையும் குறிப்பிடலாம்.முன்பு மேற்கத்திய முறைப்படி அவர்களின் மதக்கிரிகைகள் நிகழ்த்தப்பட்டன. இப்போது அவ்வாறு இல்லை.

அவர்கள் எமது தேசத்தோடு கலந்துவிடுகையில் எம்மோடு சுதேசிகளாக இருந்த முஸ்லிம் இனம் அதிலிருந்து வெளியேறி இருக்கிறது.
இந்த முரணை நாம் சீர்படுத்திக்கொள்ள வேண்டுமானால்
நாம் பிளவுபட்டோ, யுத்தங்கள் நிகழ்த்தியோ அல்லது வெளிநாட்டு முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எமது நாட்டில் யுத்தத்துக்கான பூமியொன்றை ஏற்பாடுசெய்து கொடுத்தோ இதை தீர்க்க முடியாது.
இங்கே ஆயிரம் வருடங்களாக எம்மோடு இருந்த எமது சகோதர்களோடு இவைகளை எமக்கு பேசித்தீர்க்க முடியும். அதற்குண்டான தலையீட்டைத்தான் நாம்செய்கிறோம்.

முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிறைய காரணங்கள் உள்ளன. முஸ்லிம்கள் ஆயிரம் வருடங்களாக இந்நாட்டில் வாழுகிறார்கள். அவர்கள் எப்போதும் இந்நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தவர்களல்ல. வெளியே இருந்து ஆக்கிரமிப்புகள் நடந்தபோது கூட அவர்கள் இந்நாட்டு அரசனின் பக்கமே துணையாக செயல்பட்டார்கள். யுத்தத்தின் போதும் பெருமளவில் இராணுவத்திற்கு உதவியளித்தார்கள். அதனால்தான் காத்தான்குடி பள்ளிவாசல் கொலைகள் போன்றவை நடந்தன.
- கல்கந்தே தம்மானந்த தேரர்

முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிறைய காரணங்கள் உள்ளன.
முஸ்லிம்கள் ஆயிரம் வருடங்களாக
இந்நாட்டில் வாழுகிறார்கள் .
அவர்கள் எப்போதும் இந்நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முற்சித்தவர்களல்ல.
வெளியே இருந்து ஆக்கிரமிப்பு கள் நடந்தபோது கூட அவர்கள் இந்நாட்டு அரசின் பக்கமே துணையாக செயல்பட்டார்கள்.
யுத்தத்தின் போதும் பெருமளவில் இராணுவ த்திற்கு உதவியளித்தார்கள்.
அதனால்தான் காத்தான்குடி பள்ளிவாசல் கொலைகள் போன்றவை நடந்தன. யாழ்பாணத்திலிருந்து அவர்கள் விரட்டப்பட்டார்கள். இவற்றையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

அவர்கள் சுதேசமக்கள்.
கடந்த 25 வருடங்களாக நிகழ்ந்த உலகமயமாக்கல் காரணமாக அவர்கள் சவுதி அரேபியாவின் கலாச்சார விழுமியங்களை பின்பற்ற தலைப்பட்டனர். ஆயிரம் வருடங்களாக நாமனைவரும் ஒரே மக்கள் சமூகமாகவே இருந்தோம். நடந்தது என்னவென்றால்
மத்திய கிழக்கின் எண்ணெய் வள நிதியுதவிகளோடு அந்நாடுகளின் தலையீடு
வரத்தொடங்கியது. அத்தோடு அவர்களின் கலாச்சாரமும் வந்தது.
இதனால் எம்மவர்களோடு முஸ்லிம்களுக்கு இருக்கும் தொடர்பு தூரவாகிப்போனது.
கிறிஸ்துவ மதத்திலோ இதற்கு மாற்றமாக நிகழ்ந்தது. போர்த்துக்கேய ஆக்கிரமிப்பு மூலம் கிறிஸ்தவ மதம் இங்கு வருகிறது. ஆயுதம்தாங்கிய மனிதர்கள் மூலமே அம்மதம் இங்கு வந்தது.
ஆனால் கடந்த 30.40 வருடங்களில் அவர்களின் சிறந்த அணுகுமுறை மூலம்
கிறிஸ்துவ ஆலயங்கள் எமது தேசிய கலாச்சாரத்தோடு சங்கமித்தன. இதற்கு உதாரணமாக கண்டியில் இருக்கும் சேலையணிந்த மரியாளின் சிலையையும்.. நீர்கொழும்பில் எமது பிக்கு களின் ஆடையை ஒத்த ஆடையை அணிந்த நிலையில் இருக்கும் இயேசுவின் சிலையையும் குறிப்பிடலாம். முன்பு மேற்கத்திய முறைப்படி அவர்களின் மதக்கிரிகைகள் நிகழ்த்தப்பட்டன. இப்போது அவ்வாறு இல்லை.

அவர்கள் எமது தேசியத்தோடு கலந்து விடுகையில் எம்மோடு சுதேசிகளாக இருந்த முஸ்லிம் இனம் அதிலிருந்து வெளியே றி இருக்கிறது.
இந்த முரணை நாம் சீர்படுத்திக் கொள்ள வேண்டுமானால்
நாம் பிளவுபட்டோ, யுத்தங்கள் நிகழ்த்தியோ அல்லது வெளிநாட்டு முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எமது நாட்டில் யுத்தத்துக்கான பூமியொன்றை அமைத்துத் கொடுப்பதன் மூலமோ இதை சரிப்படுத்த முடியாது.
இங்கே ஆயிரம் வருடங்களாக எம்மோடு இருந்த எமது சகோதர மனிதர்களோடு எமக்கு இவற்றை பேசித்தீர்க்கமுடியும். அதற்குண்டான தலையீட்டைத்தான் நாம்செய்கிறோம்.

Q. 19) நாம் சுதேச தன்மையை கட்டியெழுப்புவதன் ஊடாக மட்டுமே நாம் ஓர் இனமாக ஓர் தேசமாக முன்னே செல்ல முடியும் என்று கூறுகிறார்கள ?

A) நிச்சயமாக..முஸ்லிமான ஒருவரிடம் சில திறமைகள்
இருக்கும். பௌத்தனிடம் வேறு சில திறமைகள் காணப்படலாம். இருவரின் திறமைகளும் இணைந்ததாக செயல்படும்போது தான் எமது நாட்டை நல்ல ஒரு நிலைமைக்கு வளமான நாடாக மாற்ற முடியும். எங்கள்மத்தியில் போட்டியிட்டு பிரிவினைகளை ஏற்படுத்திக்கொள்வதன்மூலமல்ல .

Q. 20)எமக்கிடையில் நிறைய பிளவுகள் உள்ளன. நாம் கிராம மட்டத்தில், நகர மட்டத்தில் பிரிந்துள்ளோம். இனங்களாக, சாதிகளாக பிரிந்துள்ளோம், நீங்கள் கூட நிகாயாக்களாக பிரிந்துள்ளீர்கள்.

A) ஆம், நாம் பிரிந்திருக்கிறோம் உண்மைதான். புத்தமத்தின்படி எடுத்துக் கொண்டால், இறைவனால் படைக்கப்பட்டவர் என்று ஒருவருமில்லை.
இறைவன் படைத்தான் என்று சொல்லப்பட்டால் அது எளிதாகிவிடும்.
ஆணை ஆணாகவும் பெண்ணை பெண்ணாகவும் படைக்கப்பட்டுள்ளதாக ஏற்றுக்கொள்ளப்படலாம். ஆனால் புத்த தர்மத்தின் படி அவ்வாறில்லை. ஆண் என்பவனுக்கு பல நிலைகளில் ஆண்தன்மை காணப்படலாம். பெண்களிடமும் பல படித்தரங்களில் பெண் தன்மை காணப்படலாம். அப்படியெடுத்தால் பால் நிலை வேறுபாடுகளால் வரும் பிரச்சினைகளை கூட எதிர்கொள்வது இலேசாகும். அதில் எமக்கு ஏற்றுக்கொள்ள க்கூடிய தத்துவம் உள்ளது.
ஆகவே இந்த வித்தியாசங்கள் இருப்பது இயல்பானது.
இந்த வித்தியாசங்களை ஏற்றுக்கொள்ள முடியுமான சூழலை எவ்வாறு உருவாக்கிக் கொள்வது, நீங்கள் வேறுபட்டவர். நானும் வேறுபட்டவர். நான் உங்களது வித்தியாசங்களுக்கு மதிப்பளிக்கிறேன் நீங்கள் எனது வித்தியாசங்களுக்கு மதிப்பளிக்கிறீர்கள். இந்த முறையின் மூலமே நாமிருவரும் நமது வித்தியாசங்களோடும் ஒன்றாக வாழ முடிகிறது.

அந்த சூழலை ஏற்படுத்திக் கொள்வது எவ்வாறு என்பது பற்றியே நாம் பேச வேண்டும்.
அடுத்து நீங்கள் சொல்வது போல் பிக்குகளுக்கு இடையே யும் வித்தியாசமான பிரிவுகள் இருக்கின்றன தான். இப்போதிருக்கும் நிலையில் பார்த்தால் அது கண்டி அரசுகாலத்தில் இருந்து வந்த நிகழ்வு. நிலமானிய சமூக அமைப்பின் இலட்சனங்கள் கொண்ட காணி நிலங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் முறை உருவாகிறது.
அதன் தொடர்ச்சியாக அரசர்களின் தலையீடு மூலம் சாதி அடிப்படையில்
பிக்குகளுக்கு இடையே பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

எமது அரசர்களின் முட்டாள்தனமான
வழக்கத்தை விட்டு விட்டுவிட்டு புத்தரின் போதனைக்கேற்ப இப்பிரச்சினையை தீர்த்து க்கொள்ள இன்னும் எம்மால் முடியாமலிருக்கிறது. அது கடினமான வேலை தான். ஆனால் இந்த மாதிரியான
எண்ணங்கள் சமூகமயப்படுத்தப்படும்போது இளைய பிக்குமார்கள் இவற்றை புரிந்துகொள்வார்கள்.

உதாரணமாக வத்திக்கானின் கத்தோலிக்க சபை கொண்டிருந்த கடுமையான கொள்கைகள் பற்றி விமர்சித்து 1962-65 யில் நடந்த அவர்களது திருச்சபை ஒன்றுகூடலின் போது முன்னேற்றமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் அப்போதைய பழையகொள்கைகளை விட்டு விட விரும்பாத அப்போதைய திருச்சபை பழமைவாத தலைவர்களின் அதிகாரத்திற்குற்பட்டிருந்ததால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனது.
ஆனால் நீண்ட காலத்திற்கு பிறகு இப்போது அந்த இரண்டாவது
திருச்சபையின் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட ஒரு பாப்பரசர் பதவியேற்றுள்ளார். அவர் மூலம் மாற்றங்கள் நிகழ்ந்தன.

இதுகூட அது போன்ற ஒரு புரட்சி தான். ஒரிரு நாட்களில் இந்த மாதிரியான மாற்றம் நிகழ்வதில்லை.
இதுபற்றி பேசப்பட வேண்டும். அந்தக் கருத்துக்கள் இளம் தலைமுறை பிக்குகளுக்கு போய்ச் சேரவேண்டும். இதன் மூலமே மாற்றம் நிகழும்.
பொது மக்கள் குல அடிப்படையில் பிரியாமல் இருக்கும் நிலையில் பிக்குமார்களான நாம் குலத்தின் அடிப்படையில் பிரிந்து உயர்ந்த தாழ்ந்த கொள்கைகளை கொண்டிருப்பது மிகவும் வெட்கத்துக்குறிய செயலாகும்.
இந்தமாதிரியான உங்கள் ஊடக நிகழ்ச்சிகளும் அவ்வாறான கருத்துக்களை சமூகமயப்படுத்த பெரிதும் உதவும்.

(தொடரும்…..)
 
இதன் அடுத்த பகுதியை விரைவில் எதிர்பாருங்கள் !!!

இதன் முழுமையான காணொளியை பின்வரும் இணைப்பில் காணலாம்.

https://youtu.be/PWUUWAZ24x0

1 thought on “(பகுதி -2) தெரண தொலைக்காட்சியின் Talk with Chatura நிகழ்ச்சிக்கு கண்ணியத்திற்குரிய கல்கந்தே தம்மாநந்த தேரர் அவர்கள் வழங்கிய செவ்வியின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *