(Q 21). ஒட்டுமொத்த பெளத்த மக்களுக்கும் துறவிகளுக்கும் சொந்தமானவற்றை நாம் வெவ்வேறாக பிரித்து சொந்தமாக்கிக் கொள்ள முயல்வது எமக்கு அவமானகரமானதாக இல்லையா ? உதாரணமாக ஸ்ரீ மகா போதியின் பொருப்பாளர் பதவி, ஜெயஸ்ரீ மகாபோதியின் பொருப்பாளர் பதவி மோன்றவற்றை ஒவ்வொருவரும் தமக்குச் சொந்தமானதாக நினைப்பது தான் பெளத்த துறவிகளுக்கிடையே அதிகார ஆசையும் பிரிவினையும் வளரக் காரணமாகின என்று நான் நினைக்கிறேன்.
(A) ஆம், நான் கூறும் கருத்துக்களோடு இது சம்பந்தப்பட்டிருக்கிறது.
நாம் இன்னும் நிலமானிய சமூக அமைப்பிலிருந்து பூரணமாக விலகவில்லை.
பிக்குமார்களுக்கிடையில் மட்டுமல்ல சமூகத்திலும் அரசு தொடர்ப்பாகவும் நான் காணுவது இதைத்தான். அரசனும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளருக்கும் இடையிலான ஓர் இடத்தில் நாம் ஆட்சியாளரை வைத்துள்ளோம்.
கடந்த காலங்களில் நமக்கு ஒரு அரசன் வாய்த்திருக்கிறார் என்ற தொனியில் ஒரு கருத்து
பரவலாக்கப்பட்டது.
அரசன் என்று சொல்லப்படும் போது நாம் வெட்கப்படவேண்டுமல்லவா …?
அரசன் என்பவன் பரம்பரை யாக வரும் ஒருமுட்டாள் மனிதன்தானே.
மக்களின் விருப்பத்தின் ஊடாக தேர்தல்களின்மூலம் தேர்வு செய்ய ப்படும் ஆட்சியாளர் என்பவர் அதைவிட தகைமைகள் உடைய மனிதர்களை ஆகர்ஷிக்கக்கூடிய தலைமைதுவத்துக்கு பொருத்தமான ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒருவருக்கு அரசன் என அழைப்பது அவமானத்துக்குரிய செயலல்லவா.?
இது புரியவில்லையென்றால் நாம் இன்னும் நிலமானிய சமூகத்தை சார்ந்து இருப்பதாகவும், நாம் அதை விரும்புவதாகவும் தானே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
(Q -22 )
அப்படியென்றால் பெளத்த பிக்குகளை இந்த இடத்திற்கு கொண்டு வர முடியாமல் இருப்பது ஏன்?
ஒன்றில் மஹாநாயக்கா பெளத்த பீடம் கீழிறங்கி வர வேண்டுமா ? அல்லது இவற்றின் சங்க சபாக்கள் இறங்கி வர வேண்டுமா ?
எங்கே இந்த பிரச்சினை உள்ளது ?
(A) – காரணகாரியங்களும் பலனும் என்ற அடிப்படையில் நாம் இக்கருத்துகளை சமூகமயப்படுத்துவோம். அதை ஏற்று நடக்கும் இளம் துறவிகள் உருவாக்குவார்கள். வயதானவர்கள் தமது கொள்கைகளை விடாமல் பிடித்து கொண்டு இருந்தாலும் இளைய பரம்பரை யினரிடம் இது பற்றி தொடர்ந்து பத்து வருடங்களுக்காவது
பேசப்படும் போது புதிய மாற்றங்கள் ஏற்படும் சமூகமொன்று உருவாகும்.
இது அழகான ஓர் விடயம் தான் வடக்கில் கெபிதிகொல்லாவ எனுமிடத்தில் பஸ் குண்டுவெடிப்புச் சம்பவத்தின்பின் அப்பிரதேசத்துக்குச்சென்று வேலைத்திட்டமொன்றை செய்தோம்.
அதன் தொடக்க வகுப்புகளில் அங்கே வந்திருந்த பிள்ளைகள் எவரும் யுத்த காலத்தில் பிறந்தவர்கள் அல்ல. யுத்தத்தின் பின் பிறந்தவர்கள். இப்போது புதியதோர் பரம்பரை உருவாகியுள்ளது. யுத்தத்தோடு அவர்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இதுதான் ஆகர்ஷிக்கும் விடயம். புதிய தலைமுறையினருக்கு நாம் பேசவேண்டும். அதன்மூலம் நல்லதொரு நாட்டை எம்மால் கட்டியெழுப்ப முடியும்.
(Q -22)
நான்அண்மையில் கிளிநொச்சிக்கு சென்ற சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரும் சிறுபிள்ளைகளும் கயிறு இழுத்து விளையாடுவதைப் பார்த்தேன். இந்த பிள்ளைகள் தங்கள் பெற்றோரை, உறவினர்களை படுகொலை செய்த ஓர் கூட்டமாகவே இராணுவத்தினரை பார்ப்பார்கள். ஆனால் அங்கு நான் அவர்களுக்கிடையே எந்த வெறுப்பையும் காணவில்லை.
இங்கு நான் கூறியது போல் எமது பிரிவினைகளை இல்லாமலாக்க யார் விட்டுக் கொடுக்க வேண்டும்.
(A) இந்த விடயத்தில் நாம் எப்போதும் ஓர் குற்றவாளியை உருவாக்கிக் கொள்ள விரும்புகிறோம். அதாவது உங்களால் தான் இவ்வாறு இந்த ப்பிரிவினைகள் உருவாக்கப்பட்டது என்று ஒருவரை குற்றம் சாற்றி அவர்மேல் பழி போடவே முயல்கிறோம். இது பிழையானது.
நாம் அனைவரும் கூட்டாக இதற்காக பொறுப்பு கூறவேண்டும்.
இதை நாமும் விரும்பும் காரணத்தால் தான்
இவை எமக்கிடையில் நிலைபெறுகிறது .
நாம் எப்படி அவற்றுக்கு துணைபோனோம் என்பது பற்றி எமக்குத் தெரியாது.
இதன் மற்றொரு பக்கமும் உள்ளது. அங்கே சாதிய அடிப்படையில் சிந்திப்பவரும் பிறப்பால் அவ்வாறானவர் இல்லை. குழந்தையாகப் பிறப்பவர் வளர்ந்த சமூகத்திலிருந்து வரும் வழக்கம் காரணமாக த்தான் அவரும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார். அவரைச்சுற்றி காணி நிலங்கள் உள்ளன. அவற்றோடு சம்பந்தப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். எனவே அதிலிருந்து அவருக்கு வெளியே வரமுடியாது.
நாம் இங்கிருந்து என்ன பேசினாலும், அங்கே அவ் நிலமானிய சமூக அமைப்பு இருக்கும் வரை அவரால் இதிலிருந்து வெளியே வர முடியாது.
மனிதர்கள் மாறவேண்டும் என்றால் புதிய முன்னேற்றமான கருத்துக்கள் சமூகத்தில் பேசப்படவேண்டும்.அதனால் அவர்கள் மாற்றம் காணுவார்கள்.
(Q – 23) நீங்கள் அணிந்துள்ள காவி உடையில் மிகுந்த எளிமைத் தன்மையை காண்கிறேன். சில பெளத்த துறவிகளின் காவி உடையை காணும்போது அது மிக உயர்ந்த விலை கொண்ட காவியுடையாக தோன்றும். நீங்கள் அணிந்துள்ள காவி உடையின் விலை எவ்வளவாக இருக்கும் என்று கூற முடியுமா ?
(A ) நான் அணிந்திருக்கும் இந்த அங்கி 1000/= அல்லது 1300/= ரூபாயாக இருக்கும். இங்கே 50000/= அல்லது அதற்கு அதிகமான விலைகளிலும் துறவிகளின் ஆடை விற்பனை செய்யப்படுகிறது என்பது உண்மைதான்.
நுகர்வுக் கலாச்சாரம் கடுமையான முறையில் ஊக்குவிக்கப்படும் சமூகத்தில் மதநிறுவனங்கள் கூட இவற்றை ஊக்குவிக்கும் நிலைக்கு ஆட்பட்டிருக்கிறது. உதாரணமாக
அங்கே சாதிய அடிப்படையில் சிந்திப்பவரும் பிறப்பால் அவ்வாறானவர் இல்லை. குழந்தையாகப் பிறப்பவர் வளர்ந்த சமூகத்திலிருந்து வரும் வழக்கம் காரணமாக த்தான் அவரும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார். அவரைச்சுற்றி காணி நிலங்கள் உள்ளன. அவற்றோடு சம்பந்தப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். எனவே அதிலிருந்து அவருக்கு வெளியே வரமுடியாது.
நாம் இங்கிருந்து என்ன பேசினாலும், அங்கே அவ் நிலமானிய சமூக அமைப்பு இருக்கும் வரை அவரால் இதிலிருந்து வெளியே வர முடியாது.
மனிதர்கள் மாறவேண்டும் என்றால் புதிய முன்னேற்றமான கருத்துக்கள் சமூகத்தில் பேசப்படவேண்டும்.அதனால் அவர்கள் மாற்றம் காணுவார்கள்.
- கல்கந்தே தம்மானந்த தேரர்
ஊடகங்களில் நேரடியாக ஒன்றை கொள்வனவு செய்யும்படி விளம்பரங்கள் செய்யப்படுகிறது.
அதே போல் சில விடயங்கள் மறைமுகமாக விளம்பரங்களாகவும் காணப்படுகின்றன. உதாரணமாக ஒரு பிரபலமான பிக்கு பயணிக்கும் கார் வண்டியால் அவ் வண்டிக்கு நல்ல விளம்பரம் கிடைக்கிறது.
இந்த நுகர்வுக் கலாச்சாரத்துக்குள் வன்மையாக சிக்கியுள்ள இடமாக பௌத்த ஆலயங்கள் மாறியுள்ளன.
இதற்கு சிறந்த உதாரணமாக அண்மைக் காலங்களில் மிகவும் தேர்ந்த திட்டமிட்ட வகையில் கட்டப்பட்டுள்ள மடாலயங்களை (අසපුව) குறிப்பிடலாம். மிக அழகிய அமைப்பில் அவை கட்டப்பட்டுள்ளன. ஆனால் பழைய பௌத்த ஆலயங்கள் அவ்வாறில்லை.
அண்மைய காலங்களில்.. விசேட மாக உங்கள் ஊடகங்கள் வியாபார போட்டி காரணமாக இவற்றுக்கு அதிகமான அனுசரனைகளை பெற்று க்கொடுக்கின்றன.
இப்போது இருக்கும் முக்கிய வியாபார சந்தையாக புத்தமதம் ஆகியிருக்கிறது.
பலவிதங்களில் புத்தமதம் வியாபார நோக்கத்திற்காக உபயோகிக்கப்படுகிறது. அழகிய தோற்றம் கொண்ட பிக்குகள் அழகிய முறைகளில் சொற்பொழிவாற்றும் பிக்குகள் தொலைக்காட்சி சேனல்களில் பலவிதத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றார்கள் .
மேழும் புனிதத் தந்த பழிபாடு போன்ற மதக்கிரிகைகள், விடியற்காலை நிகழ்த்தும் மதக் கிரியைகள் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
இவையனைத்தையும் எடுத்துக் கொண்டால் Rating இல் முன்னனி வகிப்பதற்கான போட்டியில் அதிகமாக பயன்படுத்தப்படுவது மதம் தான். இந்த துறவிகளின் ஆடை தொடர்பான விலைகளும். அதில் ஒரு பகுதிதான்.
(Q 24) நீங்கள் கூறியதற்கு ஒன்றை சேர்ப்பதாக இருந்தால், அதிகாலையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டாலும் நாம் அதிகமாக Ratings எடுப்பது ஒன்றில் “பிரித்” ஓதல் அல்லது தர்ம பிரசங்கம் போன்றவற்றிலிருந்தே.
இவைகளில் கூறப்படுவது போன்று அதாவது ருவான்வெலி மகாவிஹாரை முன்றலில் இருந்து செய்தவைகள், அல்லது தலதா மாளிகாவையின் தங்க மடாலயத்தில் வைக்கப்பட்டுள்ளவைகள் போன்றவற்றில் ஏதாவது விஷேட ஆசிர்வாதம் உள்ளதா ? சமூகமும் அதனை நம்புகிறது.
இது பற்றிய உங்கள் கருத்து என்ன ?
(A) மனிதர்கள் குறிக்கோள்களற்று இயலாமையினால் நிர்க்கதியாக நிற்கும் போது சிலர் மதத்தை வியாபாரமாக உபயோகித்து விற்பனை செய்து இலாபமீட்டிக் கொள்ள முனைகின்றனர். அவர்களின் அனாதரவான நிலையை பாவித்து மக்களை சுரண்டிக்கொள்ள நினைக்கின்றனர்.
அதன்றி அவர்களின் பிரச்சினைக்கு தீர்வொன்றை தர அவர்களால் முடிவதில்லை.
நான் முதலில் சொன்ன காயமடைந்த மக்கள் தொடர்பில் இது பொருந்தும்.
காயமடைந்து நிர்க்கதியாக நிற்கும் மக்களை அதிலிருந்து விடுவிக்காமல் வியாபார நோக்கத்திற்காக அவர்களை பாவித்து சுரண்டி வருகின்றனர்.
நாம் புத்த மதத்தை பாதுகாக்க வென்று பல விடயங்களை முன்னெடுக்கிறோம்.
புத்தகங்களை தடைசெய்கிறோம். எழுத்தாளர்களை கைது செய்கிறோம். நான் நினைக்கிறேன் . இம்மாதிரியான செயல்கள் தான் புத்தமதத்துக்கு அதிக பாதிப்பை உண்டாக்கும்.
விசேடமாக இந்த ஊடகங்கள் மூலம்
வியாபார நோக்கத்திற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மூலமாக புத்தமதத்தின் அடிப்படை கொள்கைக்கு ஏற்படுத்தும் பாதிப்பை விட அதிக பாதிப்பை சாதாரணமாக ஓரிரு மனிதர்களால்ஏற்படுத்த முடியாது.
மக்கள் நினைக்கும் விதத்தை சீர்படுத்தும் சக்தி
ஊடகங்களுக்கே பெருமளவு காணப்படுகிறது. எனவே ஊடகங்களை விட அதிக பாதிப்பை ஓரிருவரால் ஏற்படுத்த முடியாது.
(Q 25) ஊடகம் என்ற வகையில் எமக்கும் ஒரு கொள்கை உள்ளது, ஆனால் நாம் இங்கு வித்தியாசமான கருத்துக்களை கலந்துரையாடலுக்கு உட்படுத்தவே முயற்சிக்கிறோம். எனவே இந் நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு நல்லதொரு செய்தியை கொடுக்க முடியும்.
(A) மனிதர்கள் அறிவை பெற்று விட்டால் என்ன நடக்கும் என்பதில் சிலர் பயப்படுகிறார்கள்.
ஊடகங்களில் ஒலிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களின் வியாபாரம் தொழில் பாதிப்படையும் தான். ஆனால் அதற்கு பதிலாக உங்கள் ஊடகங்களுக்கு சிறந்த நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்க வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால் உங்கள தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை. மேழும் அழகான நல்லவற்றை வழங்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது.
(Q 26) ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி நாம் பேசினோம். அடுத்து, விலையுயர்ந்த காவி உடைகளை அணிவது பற்றி நீங்கள் கூறினீர்கள்.
எங்களுக்கு தெரியும் புத்தரும் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்தார், அவர்களுக்கு பூஜை செய்ததாகவும் நாமறிந்த பெளத்த இலக்கியத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. புத்தரே அவ்வாறு அணிந்துள்ள போது இன்று எம்மிடையேயுள்ள பெளத்த துறவிகளுக்கு எளிய ஆடைகளை அணியுமாறு எமக்கு கூற முடியுமா ?
A) புத்தர் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்ததாகவும், அவற்றை பூஜையளித்தாகவும் வரும் செய்திகள் சரியானவையல்ல. நாம் இங்கு இதன் முழுமையான கதையை எடுத்தால், அவர் இராஜவம்சத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் பாதையோரத்தில் ஒரு மரத்தினடியில்
அவரின் இருதி மூச்சை விடுகிறார்.
நமது விஹாரை களில் வரையப்பட்ட சித்திரக்கதைகளில் அவரை அரசர்கள் குமாரர் கள் வைத்தியர்கள் என பலநூறு பேர் சூழ்ந்திருக்கும் காட்சியை காணலாம். ஆனால் அவரின் இறுதி நேரத்தில் புத்தரோடு இருந்தது ஆனந்த ஹிமி மட்டுமே.
பரிநிர்வாணசூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இறுதி நேரத்தில் அவருக்கு தாகத்தை தீர்க்க தண்ணீர் கொஞ்சமாவது கிடைக்காத நிலையிருந்தது. அவருக்கென்று வருமானங்களோ சொத்துக்களோ இல்லாத நிலையிலேயே அவர் இறுதிக் காலங்கள் கழிந்திருக்கின்றன.. அவரின் கடைசி உணவு கூட மோசமான நிலையிலேயே இருந்தது. அதன் மூலமே அவரின் நோய்மை அதிகரித்து பாதையோரத்தில் மரத்தின் அடியில் இறப்பைத் தழுவுகிறார்.
இந்தச்செய்திகளிலிருந்து புத்தரை ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த ஒருவராக நாம் கருத முடியுமா ?
(Q 27) ஆனால் நாம் அறிந்துள்ளதன்படி, மக்கள் அழுது புலம்பிய, தேவர்கள் கூட பிரசன்னமான, பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஓர் ஆடம்பரமான மரணமே புத்தருடையது.
(A) 2500வருடங்களின் பின் பௌத்த சாஹித்யத்தில் அலங்கரிக்கப்பட்ட சரிதை யாக புத்தரின் வரலாறு மாற்றமடைகிறது. விளக்கமாகக் கூறுவதென்றால்,
மிக உயர்ந்த உத்தமரான புத்தபிரான் இந்த மன்னர்களின் இந்த பூங்காவில் மரணித்தார்
என்று சொல்லும் போது அது எமக்கு புரிவதில்லை. ஆனால் உண்மையில் நிகழ்ந்தது அதுவல்லவே.
நிதர்சனத்தில் அவர் உடல் தளர்ச்சி யுற்ற
என்பது வயதைத் தாண்டி யவராக துணைக்கு ஆனந்தஹிமி யிடம் மட்டும் உதவிபெற்றவராக, கிடைக்கும் உணவைப் புசிப்பவராக, அவ்வுணவு ஆரோக்கியமான தாகக்கூட இல்லாத நிலையில் பிறகு நோயாளியாகி மரத்தின் அடியில்உயிரை விடுகிறார்.
அப்படியான புத்தரை எடுத்தால் எம்மால் இந்த ஆடம்பர விடயங்களை விட்டு விலகி விடமுடியும்.
நமது விஹாரை களில் வரையப்பட்ட சித்திரக்கதைகளில் அவரை அரசர்கள் குமாரர் கள் வைத்தியர்கள் என பலநூறு பேர் சூழ்ந்திருக்கும் காட்சியை காணலாம். ஆனால் அவரின் இறுதி நேரத்தில் புத்தரோடு இருந்தது ஆனந்த ஹிமி மட்டுமே.
பரிநிர்வாணசூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இறுதி நேரத்தில் அவருக்கு தாகத்தை தீர்க்க தண்ணீர் கொஞ்சமாவது கிடைக்காத நிலையிருந்தது. அவருக்கென்று வருமானங்களோ சொத்துக்களோ இல்லாத நிலையிலேயே அவர் இறுதிக் காலங்கள் கழிந்திருக்கின்றன.. அவரின் கடைசி உணவு கூட மோசமான நிலையிலேயே இருந்தது. அதன் மூலமே அவரின் நோய்மை அதிகரித்து பாதையோரத்தில் மரத்தின் அடியில் இறப்பைத் தழுவுகிறார்.
இந்தச்செய்திகளிலிருந்து புத்தரை ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த ஒருவராக நாம் கருத முடியுமா ?
- கல்கந்தே தம்மானந்த தேரர்
(Q 28) நீங்கள் கூறுவதன்படி எமது வரலாறு, எமது பெளத்த இலக்கியங்களில் மிகைப்படுத்தப்பட்டு உலங்காரமாக கூறப்பட்டுள்ளது என்று கூறுகிறீர்களா?
(A) அவர் வாழ்ந்த காலத்தில் இருந்து 2500வருடங்களுக்குபின் நாம் இன்று இருக்கிறோம் என்பதை நாம் விளங்குதல் வேண்டும். இந்த நீண்ட காலத்தில் பலவிதமான விடயங்கள் பெளத்த தர்மத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காலத்திலும் நிகழ்ந்த சம்பவங்கள் காரணமாக புதிதாகஅவை புகுத்தப்படிருக்கலாம்.
உதாரணமாக.எனது பேராசிரியர் வல்பொலறாஹுல ஹிமி ஒருமுறை என்னிடம் கூறினார்,
அவர்களின் சிறுவயதில் போதிபூஜை என்று ஒரு கிரியை இருக்கவே இல்லை என்று.
நான் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. போதிபூஜை என்பது பெளத்த சித்தாந்தத்தில் முக்கியமான ஓர் விடயம்.
அவர் கூறினார், அப்படியல்ல நாம் சிறுவயதில் விஹாரை ஸ்தூபி க்கு தீபமேற்றி பூவைத்து வணங்கி வந்தோம்.போதிமரத்துக்கும் புத்தசிலைக்கும் தீபமேற்றி வணங்கிவந்தோம்.ஆனால் அவைககளிடம் பிரார்த்தனை செய்து கேட்கவில்லை.
நாமொன்றை அடையும் பொருட்டு பிரார்த்தனை செய்து வணங்கும் சடங்கு அண்மையில் உண்டாக்கப்பட்டது.
அதன் பின்னர் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.. மனிதர்கள் அனாதரவான நிலையில் தனது இயலாமையை கூறி நிம்மதி பெற ஓரிடம் இல்லாதபோது இவ்வாறான சடங்குகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறன. போதிபூஜை பிரபலமானது.
விசேடமாக யுத்தகாலத்தில் நான் போதிமரத்தடியில் அதிகமாக இராணுவ த்தினரின் குடும்பத்தினரை கண்டேன். எந்நேரம் என்னநடக்கும் என்பதில் பீதியடைந்து
நிர்க்கதியாக நின்றபோது தமது இயலாமையைக் கூற இறைவன் என்றொரு கருத்தியல்
அவர்களிடம் இருக்கவில்லை. ஆகவே
அப்படி யாரும் இல்லை என்றபோது போதியில் சென்று தம் நிலைகூறி அமைதியை பெற நாடினர்.
சுமார் 50 60 வருடங்களுக்குள்ளேயே புத்தமதத்திலிருந்து பிரித்துவிட முடியாத
போதிபூஜை போன்ற சடங்குகள் உருவாக முடிகிறது என்றால் 2500வருடங்களாக இதில் எவ்வளவு விடயங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்?
அவற்றை எதிர்ப்பதல்ல .அவற்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
பெளத்த சித்தாந்தம்
மனிதர்களோடு இணைந்து புழங்கப்பட்டு வந்துள்ளது. எத்தனையோ இயற்கை அழிவுகள் பட்டினி பஞ்சம் புயல் யுத்தம் போன்ற அனர்த்தங்களுக்கு ஆட்பட்பட்டு
கடந்து வந்திருக்கிறது.
சுமார் 150ஆண்டுகளுக்குமுன் அப்போதிருந்த காலக்கட்டத்தில் ஒரு ஆணுக்கு மூன்று மனைவிகள் வரை
வைத்திருக்கும் நிலையிருந்தது . ஏனெனில் சுகாதார முன்னேற்றம் இல்லாத காரணத்தால் பிரசவ மரணங்கள் பரவலாக ஏற்பட்டன.
இந்த துயரங்களை சுமந்து கொண்டு வந்த மக்கள் மதத்தின் மூலமே மீட்சியை எதிர்பார்த்தனர். அவ்வாறான சூழ்நிலைகளின் போது பல விடயங்களை அதில் புதிதாக உருவாக்கப்பட்டன. இதை புரிந்து தெளிவு பெற்றால் இதன் உண்மையான
நோக்கத்தை நாம் கண்டறிந்து கொள்ளலாம்.
இந்த பிரச்சினைகளுக்கான மருந்தாக பௌத்தமதத்தின் மூலக்கொள்கை என்ன கூறுகிறது? அதை எப்படி நாம் எம்மிடத்தில் கொண்டு வருவது? அதை உங்கள் ஊடக நிறுவனங்களின் பரிபாலன த்தில் எப்படி கொண்டு வருவது?அரசியலமைப்பில் அதனை எவ்வாறு கொண்டு வரலாம்? எம்மைப் போன்ற ஆசிரியர்களின் கற்பித்தலில் அவற்றை எவ்வாறு செயல்படுத்தலாம் ? என்ற தெளிவைத் பெற்றால் இவ்வாறான சடங்குகள் அவசியமில்லாமல் ஆகிவிடும்.
அவ்வாறு நாம் நினைத்தால் புத்தபூஜைகள் அவசியமில்லை. உங்களது பூஜைகளை விட சிறந்த பூஜைகளை நிகழ்த்தும் போட்டி மனப்பான்மையை தவிர்க்கலாம். அதாவது நீங்கள் நெய்பூஜை செய்தால் நான் அதைவிட விலையுயர்ந்த விளக்கெண்ணெய் பூஜை செய்வேன் என்பதான போட்டி சிந்தனைகளை விட்டுவிட்டு நாமிருவரும் ஒரே நோக்கத்திற்காக சரியான கொள்கைகளின் பால் செல்லமுடியுமானால் இதனால் மனிதர்களை சுகப்படுத்தும் காரியத்திலும் நாமிருவரும் இணைந்து செயல்பட முடியும்.
புத்தர் வாழ்ந்திருந்த காலத்தில் மக்களால் அவரோடு நேரடியாக தொடர்புகொள்ளமுடியுமாயிருந்தது.
அவருடைய மரணத்தை த் தொடர்ந்து அவர் வழியை பின்பற்றிச் செல்வோருக்கு
அந்த வாய்ப்பில்லை. ஆகவே அதன் பிறகுதான்போதிமரம், புத்தரின் புனித பாதம், புத்தசிலைகள் ,போன்ற பௌத்த இலட்சினைகள் கொண்டுவரப்பட்டது.
புத்தர் ஜீவமானநிலையில் இல்லாதபோது அவரின் வழிமுறைகளை தொடர்ந்து கொண்டு செல்லும் நோக்கத்துடன் இவ்வாறான இலட்சினைகள் உருவாக்க ப்பட்டது.
ஒரு தலைமைத்துவம் இல்லாமல் போனபின் ஒரு இயக்கத்தை எப்படி நிர்வகிப்பது என்கிற பிரச்சினை. இது தான் இயற்கை.
எனவே நாம் செய்யவேண்டியது, அவைகளை தவிர்த்துவிடுவதல்ல, கலாச்சார ரீதியான சடங்குகள்.
என்ற வகையில் அவை இருப்பதில் தவறில்லை. எனென்றால் அதில் மக்களுக்கு சில பயன்களும் உள்ளன.
உதாரணமாக.
ஒருவர் மரணித்த பின்பு அவரது உறவினர்கள் மூலம் செய்யப்படும் பாஙசகூலய சடங்கு ஒரு சிறந்த சுகமளிக்கும் செயல்முறை.
வெற்றுப் பாத்திரம் ஒன்றையும் அதோடு தண்ணீர் நிறைந்தபாத்திரமும் அங்கே வைக்கப் பட்டு செய்யப்படும் மத அனுஷ்டானங்களை செய்து குடும்பத்தினர் அனைவரும் இணைந்து வெற்றுப் பாத்திரத்தினுள் நிறைந்த பாத்திரத்தில் உள்ள நீரை வழிந்துதோடும்படி ஊற்றுவார்கள்
அதாவது வெறும் பாத்திரமாக இருந்த மரணித்தவருக்கு நன்மைகள் நிறைந்து வழிகிறவராக இந்தச்சடங்கு மூலம் உணர்த்தப்படும் வகையில் அழகிய உபதேசமொன்று அதில் பொதிந்து உள்ளது. மனிதர்களின் மனதை சுகப்படுத்த சிறந்த முன்னேற்றமான முறை அது.
அடுத்து
மலர்களை பூஜைசெய்வதில் அந்த மலர் வாடிவிடுவது போல் நமது வாழ்க்கையும் ஒருநாள் ஓய்ந்து விடும் என்றஉபதேசம்
நினைவுகூறப்படுகிறது.
இவற்றில் எமக்கு பெறுமதியான செய்திகள் இருக்கிறன.
(Q 29 ) ஆனால், இப்போது எம்மிடம் வெறும் பாராயணம் செய்யும் முறையே உள்ளது. இவற்றின் அர்த்தங்கள் எமக்குது தெரியாது. இது இவற்றின் உண்மையான அர்த்தத்தை வெளிக்காட்டுவதில்லை அல்லவா ?
(A) பெருமளவில் மக்கள் கூட்டமாக இணைந்து இலட்சக்கணக்கில் பூக்கள், பழங்கள் பூஜை செய்வது., விளக்கு கள் ஏற்றி பூஜை செய்வது போன்ற ஆடம்பரமான பிரமாண்டமான ஏற்பாடுகளை அழிவுக்கான நிகழ்வுகளாகவே நான் காண்கிறேன்.
ஒரு மலரை பறிப்பது போலல்ல ஆயிரக்கணக்கான மலர்களை பறிக்கும் போது அந்த மலர்களால் வாழ்ந்து கொண்டிருக்கும் வண்டுகள் பூச்சிகள் போன்ற ஏனைய ஜீவராசிகள் பாதிக்கப்படுகின்றன.
ஏன் அதை எம்மால் எளிமையான முறையில் நிறைவேற்ற முடியாது.?
எமது நிகழ்ச்சிகளுக்கு வந்த சிறுவர்களிடம் நான் பேசும் போது, அவர்கள் அதிகமான பூக்களை பறித்து வந்தார்கள். நான் அவர்களிடம் இந்த பூக்களை அண்டி எத்தனை சிறிய ஜீவராசிகள் வாழ்கின்றன என்று கேட்டேன். வண்ணாத்திப் பூச்சிகள், வண்டுகள் என அவர்கள் கூறத் துவங்கினார்கள்.
இவைகளைப் பறிப்பதால் அவற்றுக்கு என்னவாகும் ? எனக் கேட்டேன்.
அவைகளுக்கு உணவு இல்லாமல் போகும் என்றனர்.
அப்படியென்றால் உங்களுக்கு ஓரே ஒரு பூவை மட்டும் பறித்து வர முடியாதா எனக் கேட்டேன்.
நாம் அவர்களுக்கு ஓரிலட்சம் பூக்களை பறித்து வாருங்கள் என்று கூறினாலும் அவர்கள் அதை செய்வார்கள்.
எனவே அவர்களோடு உரையாடும் போது
இந்த இயற்கை வளங்கள் மரம் செடிகளனைத்தும் எமக்கு மட்டுமே உரியதல்ல. அனைத்து உயிர்களோடும் இவற்றை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை புரியவைக்க வேண்டும்.
மதச்சடங்குகள் தொடக்கத்தில் அர்த்தம் பொதிந்த செயல்களாக தான் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆனால் காலம் செல்லச்செல்ல அவை கலாச்சார வழக்கமாக மாற்றம் பெற்றிருக்கிறது.
அந்த கலாச்சார வழக்கங்களின் அர்த்தத்தை நாம் முதலில் தேடிப்பார்த்து அறிந்து கொள்ள வேண்டும். அதன்றி பரம்பரையாக வருகிறது என்றகாரணத்துக்காக மட்டும் செய்து வரக்கூடாது. அவற்றைக்கேள்விக்கு உற்படுத்தி தெளிவடைய வேண்டும்.
எனது ஆசிரியர் வல்பொலறாஹுல தேரர் எழுதிய சத்யோதய என்ற புத்தகத்தில் இந்தக்கலாச்சார விதிகள் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
ஒரு துறவிகளின் குழு ஒன்று பிட்சை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளியேறிச்செல்ல முற்படுகின்றனர். அதில் தலைமைத்துறவியானவர் தனது பாத்திரத்தை வானை நோக்கி உயர்த்திப் பார்த்துவிட்டு பயணத்தை தொடர்ந்தார். அதைப்பின்பற்றி ஏனைய துறவிகளும் தமது பாத்திரத்தை வானை நோக்கி உயர்த்திப் பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கினார்கள்.
பிறகு அந்த பிக்குகளின் தலைமுறையில் ஏழு பரம்பரை வரை பிட்சை க்காக போகுமுன் இவ்வாறு பாத்திரத்தை வானுக்கு உயர்த்திபார்த்துவிட்டு வெளியேறிச் செல்லும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள்.
ஆனால். முதன் முதலில் பாத்திரத்தை உயர்த்தி ப் பார்த்த தலைமைப்பிக்கு
அவரின் பாத்திரத்தில் சிறிய துளையொன்று இருந்ததால் தான் அவ்வாறு நோட்டமிட்டார்.
அவர் காரணத்தோடு அவ்வாறு செய்ததை பின்பற்றி ஏனையவர்களும் செய்யத் தலைப்பட்டதால் அது ஒரு வழக்கமான சடங்காக நிலைபெற்று விட்டது.
புத்தமதத்தில் எந்த ஒன்றை பற்றியும் கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ள எந்தத் தடையும் இல்லை.
காலாமேசூத்திரத்தில் புத்தர் பரம்பரையாக வந்த வழக்கம் என்பதற்காக எந்த ஒன்றையும் செய்யாதீர்கள் என்று எவ்வளவு கூறியும் ஏன் நாம்
இவற்றைப் பற்றி கேள்வி கேட்க அஞ்சுகிறோம் ?
(Q 31) அடுத்த விடயம் தான் விஹாரையின் தலைமைப் பிக்குவிற்கு நாம் மிகுந்த மறியாதை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு மிகுந்த அதிகாரமும் மதிப்பும் உள்ளது. இது சரியானதா?
இவ்வாறான கலாச்சார வழக்கங்களை மாற்றம் பெறச் செய்ய வன்முறை மூலமோ சம்பந்தப்பட்டவர்களுக்குபாதிப் புகளை ஏற்படுத்தியோ செய்ய முடியாது. ஏனெனில் அதன்மூலம் தோல்வியுற்ற ஒருவரை நாம் உருவாக்கிவிட்டு பெறும் வெற்றி வெற்றி அல்ல. ஒருவரை தோல்வியடையச் செய்து நாம் பெறும் வெற்றி வெறியாகமுடியாது. அவரும் வெற்றி யின் பங்காளியாக இருக்கவேண்டும்.
இது நாம் பரஸ்பரம் இணக்கப்பாட்டோடு செய்யும் உரையாடலாக வேண்டும். அதன்மூலமே சிறந்த சமூகமொன்றை நோக்கி அனைவரையும் கொண்டு செல்லமுடியும்.
Q 32) அதாவது தெளிவான, சரியான பெளத்த சித்தாந்தம் எமது பிக்குகளுக்கு கிடைக்கவில்லை என்று கூறுகிறீர்களா?
மேழும் இவ்வாறான மதச்சடங்குகளில் ஈடுபட்டு வருகிறவர்களும் பயம் காரணமாகவே இவற்றில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் .
அவை மாற்றம் பெறவேண்டும். அதாவது இலங்கை பொருத்தவரை சிறுபிள்ளை களே துறவிகளாக ஆக்கப்படுகின்றனர்.
அதுவும் ஒரு கலாச்சார வழக்கம்தான்.
இந்த சாசனத்தை தொடர்ந்து கொண்டு செல்ல தான சடங்கு விடயங்களுக்கு சமூகமளிக்க துறவிகள் தேவை என்பதால் தான் இந்த நடைமுறை ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் பௌத்தத்தின் மூலத் தத்துவத்திற்கேற்ப அடிப்படைத் தேவைகளுக்கு மாற்றமாக இந்த நடைமுறைகளை நிறுவனங்கள் செயல்படுத்துகிறதென்றால் அதன் பலனும் கொள்கைக்கு மாற்றமானதொன்றாகவே இருக்கும்.
எம்மோடு இணைந்த உங்களுக்கு மிக்க நன்றி. இறுதியாக சமூகத்திற்கு என்ன கூற விரும்புகிறீர்கள் ?
இந்த விடயத்தில் புத்தர் என்ன செய்தார் என்பதே என் கேள்வி. வீட்டைவிட்டு வெளியேறி எண்பது வயதுவரை அவர் செய்த தியாகத்தின் அர்த்தம் என்ன?
மனிதர்களை மனரீதியாக சுகப்படுத்தும் காரியத்தை தானே அவர் செய்தார்?
அவர்கூறிய வழியிலன்றி வேறொரு முறையால் எம்மால் என்னசெய்யமுடியும்?
அரசியலில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை பெற்று அதன் மூலம் இந்த தர்மத்தை பாதுகாக்கும்படி அவர் சொல்லவில்லை.
சாமான்ய மக்களிடம் சென்று அவர்களுக்கு உதவி செய்து அவர்களை சுகமளிக்கும் காரியத்தைத்தான் புத்தர் கூறிச் சென்றார். சிங்கள மக்கள், கொவிகம மக்கள் கராவ மக்கள் போன்ற மக்களிடம் மட்டும் செல்லும்படி கூறப்படவில்லை. எங்களுக்குள் சாதி, குலம், இனம் போன்ற பிரிவுகள் இல்லை. நாம் மக்களுக்காகவே பணி செய்கிறோம்.
நாம் வாழும் சமூகத்தின் மக்களுக்கு எம்மால் என்ன செய்ய முடியும். நாம் யுத்தம், கலவரங்கள் மூலமாக காயப்பட்டவர்கள் எத்தனை பேர் எம் மத்தியில் உள்ளனர்.
எனவே வெறுமனே பூஜைகள், புனித தந்தம் காட்சிப்படுத்தல், பெரஹராக்கள் போன்றவற்றை நடத்துவது அல்ல எமது பணி.
இந்த சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு உஙுகளுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
இதன் முழுமையான காணொளியை பின்வரும் இணைப்பில் காணலாம்.